துபாயில் அன்வர் பிசினஸ்மென் குழும மேலாண்மை இயக்குநருக்கு உலக சாதனை விருது. - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 7 October 2025

துபாயில் அன்வர் பிசினஸ்மென் குழும மேலாண்மை இயக்குநருக்கு உலக சாதனை விருது.


துபாய், அக். 07 - 

துபாயில் அன்வர் பிசினஸ்மென் குழுமம் நடத்தும் மாதாந்திர வர்த்தக கருத்தரங்குகளில், மொத்தம் 360 நபர்களுக்கு 60 நாட்கள் தொடர்ச்சியாக வர்த்தக ஆலோசனைகள் வழங்கியதற்காக, உலக சாதனை விருது அன்வர் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் அன்வர்தீனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை IWR Book of World Record நிறுவனத்தின் சார்பில் அமீரகப் பிரமுகர் அலி சயீத் அலி புத்தவில் அல் மத்ரூசி வழங்கி கவுரவித்தார். மேலும், “Vision 360” நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பு கவுரவிப்பு நடைபெற்றது.


நிகழ்ச்சியில் பங்கேற்றோர்: உலக சாதனை சான்றிதழ் நிறுவன பிரதிநிதி ராஜேஷ் பெர்னாண்டோ, சென்னை குல்பி சாதிக், ராபின், ரபிக், செய்யது, வளைகுடா ஊடக நெறியாளர் கமால், தினக்குரல் நஜீம் மரைக்கா உள்ளிட்டோர். இந்த நிகழ்ச்சியின் மூலம் வர்த்தகத் துறையில் தமிழர்கள் அதிகளவில் ஈடுபட உதவியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad