துபாய் - மார்ச் 14:
அமீரக அரசின் ஆதரவுடன் ஈமான் கலாச்சார மையம் சார்பில் ரமலான் இஃப்தார் #25 நிகழ்ச்சி நேற்று (14.03.2026) துபாயில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 20 ஆண்டுகளாக துபாயில் நடைபெற்று வரும் இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தினமும் சுமார் 6000 பேர் கலந்து கொண்டு நோன்பு திறந்து வருகின்றனர். அமீரக நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சி இமான் அமைப்பின் தலைவர் PSM ஹபீபுல்லா காக்கா அவர்களின் வழிகாட்டுதலிலும், பொதுச் செயலாளர் ஹமீது யாசின் அவர்களின் தலைமையிலும் நடைபெற்றது. இமான் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படும் தன்னார்வலர்கள் இணைந்து நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழககுரல் நாளிதழின் வளைகுடா முதன்மை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தேமுதிக அமீரக பிரிவு செயலாளர் கமல் KVL, தேமுதிக அமீரக பிரிவு துணைச் செயலாளர் சாகுல் ஹமீது, சமூக வலைதள துணைச் செயலாளர் நைனா முஹம்மது, குறும்பட இயக்குநரும் சமூக சேவகருமான ராமா மலர், நித்யா, ரூபன், சதீஷ் திலக் & அம்ருதா, துபாய் முத்தமிழ் சங்க துணைத் தலைவர் மன்னை அமீன், TMMK துபாய் தலைவர் பாரூக், RR மீடியா ஒளிப்பதிவாளர் ரஷீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை இமான் சங்க பொதுச்செயலாளர் ஹமீது யாசின் தெரிவித்தார்.

.jpg)
No comments:
Post a Comment