ஐக்கிய அரபு எமிரேட்சில் செயல்பட்டு வரும் அமீரக தமிழ் சங்கத்தின் சார்பில், ஜூலை 5ஆம் தேதி, துபாயில் உள்ள அப்போலோ கிளினிக்கில் ஒரு சிறப்பு ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம், அமீரக தமிழ் சங்கத் தலைவி டாக்டர் ஷீலா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில், பலர் மனமுவந்து கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
இந்நிகழ்வில், திரைப்பட நடிகர் அப்துல்லா ஈமான், பொதுச் செயலாளர் ஹமீது யாசின், தொழிலதிபர் பால் பிரபாகர், தமிழக குரல் தொலைக்காட்சிவை சேர்ந்த Kamal KVL, டாக்டர்கள் ப்ரியா, வீணா, ப்ரியா ரஞ்சித், ப்ரியா சுரேஷ், ஹேமாஷ்ரீ, ஷீலா தாமஸ், மாடல் நடர்கள் ஜமீல், நிக்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். 100-க்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் கலந்துகொண்டு ரத்தத்தை தானமாக வழங்கியுள்ளனர். முகாமில் பங்கேற்ற அனைத்து தன்னார்வலர்களுக்கும், அமீரக தமிழ் சங்கத் தலைவர் டாக்டர் ஷீலா, நன்றி தெரிவித்துப் பூங்கொத்து வழங்கி கௌரவித்தார்.
No comments:
Post a Comment