துபாய், டிச.30:
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
துபாய் நகரில் உள்ள அன்னபூர்ணா உணவகம் நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, தேமுதிக அமீரக பிரிவு செயலாளர் கமால் கேவிஎல் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் வாகை சதீஷ்குமார், துணைச் செயலாளர்கள் சாகுல் அமீத், அம்சத்தலி, செல்வம் சேகர், கார்த்திக், தமிழ் இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜெகன் ராஜ், சமூக வலைதள செயலாளர் தங்க வடிவேலு, கேப்டன் சிவா, நைனா முஹம்மத், பெரம்பலூர் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கள்ளக்குறிச்சி சின்னா, தினகுரல் மற்றும் வணக்கம் பாரதம் வளைகுடா முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, ஆர் மீடியா புகழ் ரஷீத், சமூக ஆர்வலர் பச்ச மண் பாசறை நாசர், டிக்-டாக் புகழ் ராஜன் ஹமீது, இன்ஷா புகழ் செல்வா பானு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி, கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். “தமிழகத்தில் இத்தகைய அரசியல் தலைவர் இனி உருவாக வாய்ப்பில்லை; ஒரு நல்ல மனிதரை நாம் இழந்துவிட்டோம்” என உருக்கமாக நினைவு கூரப்பட்டது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி சிறப்பு பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில், கலந்து கொண்ட அனைவருக்கும் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் செயலாளர் கமால் கேவிஎல் நன்றியுரை ஆற்றினார்.

.jpg)
No comments:
Post a Comment