ராஸ் அல் கைமாவில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம். - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 20 December 2025

ராஸ் அல் கைமாவில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம்.


துபாய், டிசம்பர் 18:

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில், அமீரக தமிழ் சங்கம் சார்பில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, ராஸ் அல் கைமாவில் உள்ள ராக் மால் வளாகத்தில் நடைபெற்றது. அமீரக தமிழ் சங்கத்தின் தலைவி டாக்டர் ஷீலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் மற்றும் தமிழர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராக் மால் மேலாண்மை நிர்வாகி மன்சூர் கலந்து கொண்டார். மேலும், ராஸ் அல் கைமா அமீரக தமிழ் சங்க நிர்வாகிகள் அகமது பஹருதீன், ஹாசன் யாசர், மணிகண்டன், கலை கோவலன், ஊடக வலியாளர் கமல் KVL, மார்வலஸ் டென்டல் கிளினிக் இயக்குநர் டாக்டர் ஜெமீல் ராஜா, தினகுரல் மற்றும் வணக்கம் பாரதம் இதழ்களின் முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் 500-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் குடும்பத்தோடு கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, அமீரக தமிழ் சங்க நிர்வாகிகள் இயேசுபிரானின் பிறப்பை தத்ரூபமாக காட்சிப்படுத்தி நடித்துக் காட்டிய நிகழ்வு, பார்வையாளர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது. குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் உற்சாகமாக நிகழ்ச்சிகளை ரசித்து கொண்டாடினர்.


நிகழ்ச்சியின் நிறைவில், அமீரக தமிழ் சங்கத்தின் தலைவி டாக்டர் ஷீலு நன்றியுரை ஆற்றி, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும், ஆதரவளித்தவர்களுக்கும் தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad