சார்ஜா, 13 செப்டம்பர் 2025 (ஆவணி 28)
ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில், அமீரக தமிழ்ச் சங்கம் நடத்திய திருக்குறள் மனப்பாடப் போட்டி மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி சங்கத் தலைவி முனைவர் டாக்டர் ஷீலா அவர்களின் தலைமையில், சார்ஜா இந்தியன் அசோசியேஷன் பள்ளியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட மழலைச் செல்வங்களும் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் உற்சாகமாக கலந்துகொண்டனர். குழந்தைகள் திருக்குறளை எழுதியும், மனப்பாடமாகச் சொல்லியும் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் சிறந்து விளங்கிய குழந்தைகளுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பாக பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ்களும் ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினர்களாக அமீரக தலைமை காவல் துறையைச் சேர்ந்த உமர், திரைப்பட நடிகர் அப்துல்லா சாலி, ஊடகவியலாளர் கமல் KVL, ஃபேஷன் டிசைனர் அர்மா இப்ராஹிம் அப்துல் லத்தீப் ஆகியோர் பங்கேற்று குழந்தைகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி உரையாற்றிய சங்கத் தலைவர் முனைவர் டாக்டர் ஷீலா, “உலகின் மூத்த மொழியான தமிழ், உலகம் முழுவதும் தமிழர்கள் பெருமை கொள்வதற்குரிய மொழி. அந்தத் தமிழின் பெருமையைச் சிறு வயதிலிருந்தே குழந்தைகள் உணர்வதற்காக திருக்குறள் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது” எனக் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment