துபாயில் தேமுதிக சார்பில் மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 25 March 2025

துபாயில் தேமுதிக சார்பில் மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


துபாய், மார்ச் 25: ஐக்கிய அரபு அமீரகத்தில் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் மத நல்லிணக்கத்தை முன்னிறுத்தும் இஃப்தார் நிகழ்ச்சி துபாய் தேரா பகுதியிலுள்ள அன்னபூர்ணா உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்ச்சி தேமுதிக அமீரக பிரிவு துபாய் செயலாளர் கமால் KVL தலைமையில் நடந்தது. அவைத்தலைவர் காமராஜ், பொருளாளர் வாகை சதீஷ்குமார், துணைச் செயலாளர்கள் ஷாஹுல் ஹமீது, அம்ஜத்அலி, நிர்வாகிகள் செல்வம் சேகர், கார்த்திகேயன் சிவக்குமார், மகளிரணிச் செயலாளர் வகிதா பானு, இளைஞரணித் துணைச் செயலாளர் ஜெகன் ராஜ், சமூக வலைதள அணிச் செயலாளர் கேப்டன் சிவா, நைனா முஹம்மத் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


நிகழ்விற்கு துபாய் ஈமான் தமிழ் சமூக அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், TEPA அமைப்பின் நிறுவனர் பால் பிரபாகர், அமீரக தமிழ் சங்கத் தலைவி டாக்டர் ஷீலு, முத்தமிழ் சங்க நிர்வாகிகள் ஷாஹுல் ஹமீது, தங்கதுரை, தவேக் நிர்வாகி காரல் மார்க்ஸ், துபாய் தர்பார் கபீர், மீடியா தாஹிர், மீடியா ரஷீத், தேசிய தமிழ் நாளிதழ் "தினகுரல்" வளைகுடா தலைமை நிருபர் மற்றும் "வணக்கம் பாரதம்" வார இதழ் இணை ஆசிரியர் நஜீம் மரிக்கா, உலக தமிழ் பேரவை சாதிக், பாமக நிர்வாகி மகேஷ், மதிமுக துரை, தொழிலதிபர்கள் ராபின்ஷன், உஸ்மான் அலி, இன்ஷடா புகழ் பிரியா சரவணன், ஏசியா புக் சாதனை தமிழ் பாடகி மிருதுளா, டிக்டாக் மீனு, பச்சமன்னு மீடியா நாசர், திமுக நிர்வாகி பொதக்குடி தாரிக் உள்ளிட்ட பலர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.


நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, தேமுதிக கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அமீரக செயலாளர் கமால் KVL தலைமையில் நிர்வாகிகள் மற்றும் விருந்தினர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அனைவரும் ஒருமுகமாக பிரார்த்தனை செய்து அவரது நலத்திற்காக வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


இந்த மத நல்லிணக்க நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் சமூக ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இஃப்தார் உணவை பகிர்ந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad