ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழ் மக்களை கவர்ந்த பிரமாண்ட தீபாவளி விழா அமீரக தமிழ் சங்கத் தலைவர் Dr. ஷீலா தலைமையில் கொண்டாட்டம். - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 19 November 2025

ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழ் மக்களை கவர்ந்த பிரமாண்ட தீபாவளி விழா அமீரக தமிழ் சங்கத் தலைவர் Dr. ஷீலா தலைமையில் கொண்டாட்டம்.


ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், அமீரக தமிழ் சங்கத்தின் சார்பில் தலைவர் Dr. ஷீலா ஏற்பாடு செய்திருந்த தீபாவளி திருநாள் விழா மிகத் திருவிழா நாயகமாக நடைபெற்றது. சுமார் 2,000-க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


தமிழகத்திலிருந்து திரைப்பட நடிகர் மற்றும் நடன இயக்குநர் பாபா பாஸ்கர், பிக் பாஸ் புகழ் நடனக் கலைஞர் Aishu, நடிகை மற்றும் டான்சர் சுஜி பாலா ஆகியோர் கலந்து கொண்டு நடன நிகழ்ச்சிகளால் அரங்கத்தை கவர்ந்தனர். நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக மாற்றுத்திறனாளி குழந்தைகள் வழங்கிய கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தின. நரகாசுரன் நாடகம், பாடல்கள், நடனங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.


விழாவில் துபாய் திரைப்பட நடிகர் அப்துல்லா அலி வாலியார், UAE-யை சேர்ந்த முஹம்மது, School Fujairah Principal Dr. சுரேஷ்குமார், Sharjah Principal ஆரோக்கியரெட்டி, இமான் பொதுச் செயலாளர் யாசின், Triple M Production பாபு ராமகிருஷ்ணன், ராபின்சன், ஹடீப் அன்சாரி, நேச்சுரல் முவேலா, UAE ஊடகவியலாளர் Kamal KVL உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தமிழர் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பறை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் இறுதியில் Dr. ஷீலா நன்றி உரையாற்றி பங்கேற்ற அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad