துபாயில் புதிய அஞ்சப்பர் உணவகம் – தமிழரின் சுவைமிகு பாரம்பரியம் வெளிநாட்டில். - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 12 September 2025

துபாயில் புதிய அஞ்சப்பர் உணவகம் – தமிழரின் சுவைமிகு பாரம்பரியம் வெளிநாட்டில்.


துபாய் – செப்டம்பர் 12 (ஆவணி 27):

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், அஞ்சப்பர் உணவகம் புதிய வடிவில், பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுச்சுவைகளை குறைந்த விலையில் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், புதுப்பிக்கப்பட்ட இந்த அஞ்சப்பர் உணவகம் நேற்று மாலை 6 மணிக்கு துவக்கப்பட்டது.

இந்த விழாவில், மர்சூக் அல்-மன்சூரி (நிறுவனர்), டாக்டர் ஓமர் அல்மர்சூகி (முன்னாள் சாதாரண தூதர்), அகமது சலே (துபாய் காவல்துறை), உஸ்மான் அலி (ENG குழு UAE), போல்பிரபாகர் (தொழில் அதிபர்), கண்ணன் (கிரீன் விஷன் ஜார்ஜா), கமல் கே.வி.எல் (தமிழக குரல் ஊடகம்), ஹாபிட் ஜுனைட் (தொழில் அதிபர்), கமால் (அலைடு மோட்டார்), ஹமீது யாசின் (இமான் பொதுச் செயலாளர்), ரஷீத் (RR மீடியா), டிக் டாக் புகழ் சரவணன் குடும்பத்தார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


உணவக உரிமையாளர் செந்தில், வருகை தந்த அனைவரையும் அன்புடன் வரவேற்று, பொன்னாடை போற்றி, விருந்து அளித்தார். புதிய வடிவமைப்புடன், அனைவரும் குடும்பத்தோடு அமர்ந்து உணவுண்டு மகிழும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த அஞ்சப்பர் உணவகம், துபாயில் வாழும் தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்தது.


சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், “இனி பல கிளைகள் திறந்து, மேலும் தரமான உணவை வழங்குவோம்” என்று செந்தில் அவர்கள் உறுதி அளித்தார். இறுதியில் அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தற்போது அஞ்சப்பர் உணவகம் துபாய் சிலிக்கான் ஓயாசிஸ் மற்றும் கரமா கிளைகளில் செயல்பட்டு வருகிறது. 

No comments:

Post a Comment

Post Top Ad