அபுதாபி – ஆக. 28 (ஆவணி 12) -
அமீரக பயணம் மேற்கொண்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர், லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் பொருளாளர் மற்றும் அபுதாபி அய்மான் சங்க முன்னாள் பொதுச் செயலாளருமான லால்பேட்டை ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி அவர்களுக்கு அய்மான் சங்கத்தின் சார்பில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (27-08-2025) அபுதாபி செட்டிநாடு உணவகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக துணைத் தலைவர் காதர் மீரான் பைஜி அவர்கள் இறை வசனத்தை ஓதினார். சங்கத் தலைவர் கீழக்கரை ஹெச்.எம். முஹம்மது ஜமாலுதீன் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பைத்துல் மால் தலைவர் அதிரை அ. சாகுல் ஹமீது அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளராக இருந்தபோது ரப்பானி அவர்கள் மேற்கொண்ட சமூகப் பணிகள், குறிப்பாக கொரோனா கால மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நினைவு கூறப்பட்டன.
இறுதியாக, அய்மான் சங்கத்தின் சார்பில் லால்பேட்டை ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.


No comments:
Post a Comment