துபாயில் மறைந்த தேமுதிக தலைவர் திரு. கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 25 August 2025

துபாயில் மறைந்த தேமுதிக தலைவர் திரு. கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


துபாய், ஆக 25:

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் தலைவர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், மறைந்த முதல்வர் மாண்புமிகு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள், தேமுதிக அமீரக பிரிவு சார்பில் துபாயில் மிக விமர்சனமாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர். குறிப்பாக, பெருமளவு மகளிர் தொண்டர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் உஸ்மான் அலி, ஹமீது காக்கா, தினக்குரல் ஆசிரியர் நஜீம், மெரலின், குடவாசல் சாகுல் ஹமீத், சின்னத்துரை, சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வை தேமுதிக அமீரக பிரிவு செயலாளர் கமல் கேவி தலைமையேற்றார். பொருளாளர் வாகை சதீஷ், துணைச் செயலாளர்கள் ஹம்சத் அலி, சாகுல் ஹமீத், சிவக்குமார், கார்த்திக் தமிழ், செல்வம் சேகர் ஆகியோர் பணியாற்றினர். இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜெகன் ராஜ், சமூக வலைதள அணி செயலாளர் வடிவேலு, துணைச் செயலாளர் கேப்டன் சிவா, நைனா முஹம்மது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


மேலும், மகளிர் அணி செயலாளர் கலாவதி தலைமையில் பாத்திமா, தமிழ்ச்செல்வி, ஜெயலட்சுமி, ரஷ்யா பேகம், தயா ராணி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் நிகழ்வில் பங்குபெற்றனர். பச்சை மண் பாசறை சார்பில் நாசர், இன்ஷா, புகழ் நசீர், முஹம்மது ஆகியோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில், அனைவரையும் அன்புடன் உபசரித்த தேமுதிக அமீரக பிரிவு செயலாளர் கமல் கேவி நன்றி உரையாற்றினார். விழா மிகச் சிறப்பாக நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad