துபாயில் ‘ட்ரிபில் எம் ப்ரொடக்ஷன்’ சார்பில் மூவி மேக்கர்ஸ் கிளப் – புதிய தொடக்கம். - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 26 November 2025

துபாயில் ‘ட்ரிபில் எம் ப்ரொடக்ஷன்’ சார்பில் மூவி மேக்கர்ஸ் கிளப் – புதிய தொடக்கம்.


துபாய், நவ. 26:

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில், ‘ட்ரிபில் எம் ப்ரொடக்ஷன்’ சார்பில் மூவி மேக்கர்ஸ் கிளப் என்ற புதிய சங்கத்தின் தொடக்க விழா நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. அமீரக தொழிலதிபரும் ட்ரிபில் எம் ப்ரொடக்ஷன் நிறுவன Founder-ஆகிய ஜீ. பாபு ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, ‘ஸ்பிரேட் ஸ்மைல்ஸ்’ நிறுவனம் ஒருங்கிணைத்தது. நிகழ்ச்சியை ஸ்பிரேட் ஸ்மைல்ஸ் நிறுவனர் – மக்கள் ஆர்ஜே சாரா தொகுத்து வழங்கினார்.

மஞ்சுளா ராமகிருஷ்ணன், ஜெகன், சந்தோஷ், கோமதி, மோகன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த விழாவில், திரைப்பட இசையமைப்பாளர் சிற்பி, நடிகர் பக்ஸ் (பகவதி), திரைப்பட மக்கள்தொடர்பு நிகில் முருகன், நடிகை சௌமியா மேனன், இயக்குநர் சுரேஷ் காமாட்சி ஆகியவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மூவி மேக்கர்ஸ் கிளப் தொடங்கப்பட்ட நோக்கம், அமீரகத்தில் வசிக்கும் திறமையான கலைஞர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒன்றிணைந்த மேடை அமைத்துக் கொடுப்பது என நிறுவன Founder ஜீ. பாபு ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.


நிகழ்ச்சிக்கு சிறப்புவிருந்தினர்களாக துபாய் திரைப்பட நடிகர் அப்துல்லா அல்ஜஃபாலி, டோக்கியோ தமிழ் சங்கம் ஹரி, ஈரோடு அம்மன் மெஸ் இயக்குநர் வெங்கட், துபாய் ஈமான் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், S-Event Founder ஹரி, தினத்தந்தி மேலாளர் ராம், முத்தமிழ் சங்க தலைவர் ஷா, முத்தமிழ் சங்க ராமகிருஷ்ணன், ஜிவி ப்ரொடக்ஷன் பிரசாத், வளைகுடா நெறியாளர் கமல் KVL, தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் – வளைகுடா தலைமை நிருபர் நஜீம் மரிக்கா, குறும்பட இயக்குநர் ஆண்ட்ரியா பெர்னாண்டஸ், கள்ளக்குறிச்சி சின்னா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட அனைத்து சிறப்புவிருந்தினர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டு, ட்ரிபிள் எம் ப்ரொடக்ஷன் நிர்வாகி ஜெகன் நன்றியுரை வழங்கினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் மீடியா சார்பில் தமிழகத்தின் தேசிய தின நாளிதழான தினகுரல் நாளிதழுக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad