துபாய் – டிசம்பர் 02, 2025
பல்வேறு ஆண்டுகளாக மக்கள் நலச் சேவையில் தொடர்ந்து பங்காற்றி வரும் துபாய் ஈமான் கலாச்சார மையம், 54வது அமீரக தேசிய தின விழாவை துபாய் ஜபீல் பூங்காவில் மிக விமர்சையாகக் கொண்டாடியது. குடும்பங்களுடன் சிறுவர்கள், மூத்தோர் என சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் மகிழ்ச்சியுடன் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றி பரிசுகள் வழங்கினார். ஈமான் அமைப்பின் தலைவர் பிஎஸ்எம் ஹபிபுல்லாகான் தலைமையில் விழா நடைபெற்றது. துணைத் தலைவர் கமால், பொருளாளர் பிலாக் துளிப் எஹியா, பொதுச் செயலாளர் ஹமீதுயாசின், வளைகுடா நெறியாளர் கமல் KVL மற்றும் ஈமான் நிர்வாகிகள் அனைவரும் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
அமீரகத் தமிழ் அமைப்புகள், பல நிறுவனங்கள், சமூக நல ஆர்வலர்கள் உட்பட பலரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்பட்டன. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு பரிசளிப்புகளும் நடந்தன.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பாக, 20 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளாக தன்னார்வத்துடன் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கு கௌரவக் கேடயம் வழங்கப்பட்டது. இதில் தினக்குரல் வணக்கம் பாரதம் ஆசிரியர் நஜீம் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியதற்காக கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விழா ஏற்பாடுகளை பொதுச் செயலாளர் ஹமீதுயாசின் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். தமிழக குரல் நாளிதழ் சார்பாக இவ்விழாவை சிறப்பித்த ஈமான் நிர்வாகிகளுக்கும், பெருமளவில் திரண்டு கலந்து கொண்ட பொதுமக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம்.


No comments:
Post a Comment