துபாயில் தமிழர் நலவாழ்வு குழு நான்காம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 8 April 2025

துபாயில் தமிழர் நலவாழ்வு குழு நான்காம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.


துபாய், ஏப்.8 – ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், "தமிழர் நலவாழ்வு குழு" ஏற்பாட்டில் நான்காம் ஆண்டு விழா ஏப்ரல் 6ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. துபாய் ஜபில் பார்க் பகுதியில் எளிய முறையில், உற்சாகமுடன் கேக் வெட்டும் நிகழ்வின் மூலம் விழா கொண்டாடப்பட்டது.


இந்த நிகழ்ச்சி, குழுத் தலைவர் அசோக் அவர்கள் தமிழகம் சென்றிருந்த காரணத்தால், செயலாளர் ரபீக் உசேன் தலைமையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இதில் மணிகண்டன், முஜீபுதீன், பாலமுரளி, கருணாநிதி, கோபால், இப்ராஹிம், கோவிந்தராஜ், ஏழுமலை, வினோத், கணேசன், பெரியசாமி, பாலமுருகன், கமாலுதீன், ரபீக் பாபு, முஹம்மத், முஹம்மது ஷரீஃப் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


அமீரகத்தில் வசிக்கும் பல்வேறு இணையதள பிரபலங்களும், தமிழ் சமூகத்தினர் பெருந்திரளாக இதில் கலந்துகொண்டனர்.


இவ்விழாவில், இன்ஷா புகழ் நசீர், பச்சைமண் பாசறை நிறுவனர் உசேன் நாசர், கேப்டன் தொலைக்காட்சி மற்றும் தமிழக குரல் தொலைக்காட்சி வளைகுடா முதன்மை நெறியாளர் Kamal KVL, குடவாசல் அல்பகத், தவே.க கட்சி நிர்வாகி காரல் மார்க்ஸ், டிக் டாக் புகழ் அன்வர், பொதக்குடி தாஹிர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விழாவை மேலும் சிறப்பிக்க செய்தனர்.


முக்கிய விஷமாக, பெண்களும் இதில் எண்ணிக்கையிலாக கலந்து கொண்டு விழாவிற்கு வண்ணம் சேர்த்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துச் செயலாளர் ரபீக் உரையாற்றினார். அமைப்பின் நான்காம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்று அனைத்து பாராட்டுகளையும் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad