துபாய் | ஐக்கிய அரபு அமீரகம், ஜன.10:
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஜனவரி 4-ஆம் தேதி, Dubaiயில் “பச்ச மண்ணு பாசறை” சார்பில் மிகப் பிரமாண்டமான முறையில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. அதிகாலை 9.00 மணி முதல் தொடங்கிய இவ்விழாவில் பாரம்பரியமும் பண்பாட்டும் ஒருங்கிணைந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
விழாவில் சிலம்பாட்டம், கோலாட்டம், மெட்டி ஆட்டம், கபடி உள்ளிட்ட நாட்டுப்புற விளையாட்டுகள் நடத்தப்பட்டன. பெண்கள் முலைப்பால் எடுத்து தலையில் சுமந்து ஊர்வலமாக வந்த நிகழ்வு பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. அனைவருக்கும் பொங்கல் விருந்து வழங்கப்பட்டதுடன், மதிய வேளையில் சுவைமிகுந்த மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு உற்சாகமாகக் கொண்டாடினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சலாலா ஸ்டாம்ப் நாசர், உசேன் ஆகியோர் முன்னிலையில் ராவணன், ராஜன், மாலிக், நசீர், எம்.பி.கே.மோகன் உள்ளிட்டோர் சிறப்பாக மேற்கொண்டனர்.
விழாவிற்கு தலைமை விருந்தினராக திரு. அப்துல்லா அல்யம்மஹி, சிறப்பு விருந்தினராக திருமதி. ஆயிஷா கலந்து கொண்டனர். மேலும் வளைகுடா நாடுகளின் பத்திரிகையாளர்கள், ஊடகத்தினர், சமூக ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் கலைஞர்கள் பலர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிகளை அழகிய தமிழில் தொகுத்து வழங்கிய ஹர்சினி அனைவரின் பாராட்டையும் பெற்றார். விழாவின் நிறைவில், வருகை தந்த அனைவருக்கும் பச்ச மண்ணு பாசறை உசேன் அவர்கள் நன்றி தெரிவித்தார். இந்த பொங்கல் திருவிழா, வெளிநாட்டிலும் தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியம் உயிருடன் திகழ்கிறது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.


No comments:
Post a Comment