அரபு நாட்டு குவைத்தில் நடைபெற்ற கிரிக்கெட் திருவிழா வெற்றிகரமாக நிறைவு – “பயான் லூப்பர்ஸ்” அணிக்கு முதலிடம். - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 6 July 2025

அரபு நாட்டு குவைத்தில் நடைபெற்ற கிரிக்கெட் திருவிழா வெற்றிகரமாக நிறைவு – “பயான் லூப்பர்ஸ்” அணிக்கு முதலிடம்.


குவைத், ஜூலை 4 (ஆனி 20, சுபகிருது) –

குவைத்தில் உள்ள “ஸ்கை ரைடர்” மற்றும் தேமுதிக குவைத் பிரிவு இணைந்து நடத்திய கிரிக்கெட் போட்டித் திருவிழா, ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி, ஜூலை 4ம் தேதி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இவ்விழாவை ஸ்கை ரைடர் ஒருங்கிணைப்பாளர்கள் M.J. அசீப் இக்பால், H. சீனி சாதிக், H. ஹாலீத் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்தனர். பல அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில், முதல் பரிசை வென்ற “பயான் லூப்பர்ஸ்” அணிக்கு, வெற்றிக்கோப்பையும் பரிசுத் தொகையும் வழங்கினார் தேமுதிக குவைத் பிரிவு செயலாளர் மாலிக் அன்சாரி.

இதேபோல், இரண்டாம் இடத்தைப் பிடித்த “தமிழ் தண்டர்” அணிக்கு, வெற்றிக்கோப்பையும் பரிசையும் தேமுதிக பொருளாளர் A.T. முருகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தேமுதிக குவைத் பிரிவு துணைச் செயலாளர் A. பழனி, K. கருணாகரன், P. விஜயகாந்த், R. அகமது சரீப் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாக கலந்துகொண்டு, போட்டியை உயிர்ப்புடன் கண்டுகொண்டனர். இந்தக் கிரிக்கெட் திருவிழா, குவைத்தில் வாழும் தமிழ் மக்களிடையே உற்சாகத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்திய ஒரு சமூக நல நிகழ்வாக அமைந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad