துபாயில், அமீரக தமிழ் சங்கம் மற்றும் வெளிநாடுகளில் வாழும் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடிகர் விஜய் அவர்களின் 51வது பிறந்த நாள் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வர்ஷன் லூலூ உள்ளரங்கத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அமீரக தமிழ் சங்க தலைவர் முனைவர் ஷீலா அவர்கள் தலைமை தாங்கினார். உமர் அலி, முகமது அலி, உமர் முத்தூசி ஹாலித் உள்ளிட்ட அமீரகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கௌரவ விருந்தினர்களாக பங்கேற்றனர். தொழில் அதிபர்கள் பால் பிரபாகர், திரு. பிரசாத் (Danube), ரமேஷ், ப்ரியா ஹனி பீ, பகவத் ரவி, ரமேஷ் விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஆர்ஜே மாயா, நகைச்சுவை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். விழாவின் சிறப்பம்சமாக, Dance & Song Marathon எனும் நிகழ்ச்சியில், நடிகர் விஜய் நடித்த 51 திரைப்படங்களில் இருந்து 51 பாடல்கள் அடிப்படையில் 51 நிமிடங்கள் தொடர்ந்து 51 நடனக் குழுவினர் கலந்துகொண்டு ஆடல் நிகழ்த்தினர். இந்த நிகழ்வு முழுவதும் அரசியலின் பங்கின்றி, திரைப்பட நடிகர் விஜய் என்ற ரசிகர்பண்பே பிரதானமாக இருந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக கலந்து கொண்டனர்.
விழா நிறைவில், முனைவர் ஷீலா அவர்கள், பங்கேற்ற விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பூங்கொத்து வழங்கி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியின் ஒளிப்படங்கள், காணொளிகள் விரைவில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment