துபாய் - மார்ச் 12:
அமீரகத்தில் வாழும் தமிழர்களின் பங்கேற்புடன் பச்சமண்ணு பாசறை சார்பில் மூன்றாம் ஆண்டு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நாசர் உசேன், ராவணன் ஷேக், மாலிக், மோகன், ராஜன், மன்சூர் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர். பச்சமண்ணு பாசறையைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் அமீரகத்தில் வசிக்கும் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக டேஸ்ட் பிரியாணி நிறுவனத்தின் மேலாளர்கள் ஹனிபா, ஹமீது காக்கா மற்றும் தமிழககுரல் துணை ஆசிரியர் (வளைகுடா பிரிவு) கமல் கே.வி.எல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 400-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஹதீஸ் வாசிப்புடன் தொடங்கியது. நோன்பு காலத்தில் பிறருக்கு உதவி செய்யும் பண்பும், நற்செயல்களின் முக்கியத்துவமும் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து அனைவரின் நலனுக்காக சிறப்பு கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பச்சமண்ணு பாசறை மூத்த நிர்வாகிகள் நாசர் உசேன், ராஜன் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்தனர். மூன்றாவது ஆண்டாக நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.

.jpg)
.jpg)
No comments:
Post a Comment