அமீரகத்தில் தேமுதிக சார்பில் இப்தார் நிகழ்வு 2026 சிறப்பாக நடைபெற்றது. - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 3 March 2026

அமீரகத்தில் தேமுதிக சார்பில் இப்தார் நிகழ்வு 2026 சிறப்பாக நடைபெற்றது.


துபாய், மார்ச். 03:


தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) அமீரக பிரிவு சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 2026, துபாயில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 20 ஆண்டுகளாக அமீரகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் இப்தார் நிகழ்வு, இந்த ஆண்டு மிகப் பிரமாண்டமான முறையில் அனைத்துக் கட்சி நண்பர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்புடன் நடைபெற்றது. சகோதரத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது.


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, திருவாரூர் சட்டமன்ற முன்னாள் வேட்பாளரும் எஸ்.டி.பி. கட்சி மூத்த நிர்வாகியுமான நஷிமா பானு கலந்து கொண்டார். அமீரக தொழிலதிபர் உஸ்மான் அலி, குடவாசல் ஓகை ஷாகுல் ஹமீது, அல் பகத், அமீரக திமுகவைச் சேர்ந்த தாரிக், கூத்தாநல்லூர் தாஹிர், ஹபீப் ரகுமான், கூத்தாநல்லூர் முகமது ஆசிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மேலும், அமீரக பிரிவு செயலாளர் கமல் K.V., பொருளாளர் வாகை சதீஷ்குமார், துணைச் செயலாளர் சாகுல் ஹமீத், அம்ஜத் அலி, செல்வம் சேகர், கார்த்திக், சமூக வலைதள அணி செயலாளர் தங்க வடிவேலு, துணைச் செயலாளர் நைனா முஹம்மது, இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜெகன் ராஜ் சந்திரன், பெரம்பலூர் பிரகாஷ், கேப்டன் மன்றத் துணைச் செயலாளர் பஷீர், பச்சை மண் பாசறை நிர்வாகிகள் நாசர், உசேன், ராஜன், துபாய் மைந்த நசீர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


நூற்றுக்கணக்கான அமீரக வாழ் தமிழர்கள் பங்கேற்று, இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் அமீரக பிரிவு செயலாளர் கமல் K.V. நன்றி தெரிவித்தார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

No comments:

Post a Comment

Post Top Ad