துபாயில் கூத்தாநல்லூர் ஜமாத்தார்கள் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது. - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 24 February 2026

துபாயில் கூத்தாநல்லூர் ஜமாத்தார்கள் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது.


துபாய், பிப். 24:
 


துபாய் நகரில் கூத்தாநல்லூர் ஜமாத்தார்கள் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழகத்திலிருந்து வருகை தந்த ரஹமதுல்லா கலந்து கொண்டார். மேலும் இமாம் பொதுச் செயலாளர் ஹமீது யாசின், தமிழக குரல் நாளிதழ் வளைகுடா நிருபர் கமல் கேவி, கூத்தாநல்லூரைச் சேர்ந்த தலைவர் ஜமால் முகமது, செயலாளர் பாவா மைதீன், பொருளாளர் பெனாசீர் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இளைஞர்கள் மற்றும் உலமாக்கள் திரளாக பங்கேற்றனர்.


நோன்பு நாள் முழுவதும் பசியுடன் இருந்த பிறகு, மாலை 6.20 மணியளவில் இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நோன்பு திறக்கப்பட்டது. பெண்களுக்காக தனியான இட வசதி செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூத்தாநல்லூர் ஜமாத்தார்களுக்கும், இளைஞர்களுக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்தனர். நிகழ்வை ஒளிப்பதிவாளர் தாகிர் பதிவு செய்தார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

No comments:

Post a Comment

Post Top Ad