அபுதாபி, பிப்.23:
அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் புதிய நிர்வாகக் குழு பதவியேற்பு மற்றும் சென்டர் மறுதிறப்பு நிகழ்ச்சி 23.02.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் சென்டரின் தமிழ் பிரிவு அமைப்பான அபுதாபி அய்மான் சங்கம் உறுப்பினர்கள், சங்கத்தின் பொதுச் செயலாளர் லால்பேட்டை முகம்மது அப்பாஸ் மிஸ்பாஹி தலைமையில் கலந்துகொண்டனர்.
புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் Abdul Rauf Ahsani, பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கறிஞர் K. V. Mohammed Kunhi மற்றும் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட Aziz Kaliyadan ஆகியோர் அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் சமூக மற்றும் மத நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவதற்கான புதிய சட்டத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
அபுதாபி அய்மான் சங்கம் சார்பில், இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் புதிய நிர்வாகக் குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. இந்திய மக்களுக்காக பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுத்து வரும் சென்டரின் பணிகள் பாராட்டப்பட்டன. மேலும், அனைத்து மக்களின் ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் சமூக முன்னேற்றம் நோக்கி சென்டர் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என அய்மான் சங்கம் வாழ்த்துத் தெரிவித்ததுடன், எதிர்கால வளர்ச்சிக்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என உறுதியளித்தது.

.jpg)
No comments:
Post a Comment