துபாய் | பிப்ரவரி 11:
துபாய், ஐக்கிய அரபு அமீரகம் பகுதியில், அஸ்லம் தாதா பாசப்பறவைகள் சார்பில் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழா, தமிழ்நாடு தொழில் முனைவோர் அமைப்பின் தலைவர் பால் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. அஸ்லம் தாதா நிர்வாகிகள், கத்தார் நாட்டிலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர் ஹைருல்லா மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் அமீரகத்தைச் சேர்ந்த முஹம்மது மூஸா, லீனா உசேன், நாசர், சஹத் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், வளைகுடா முதன்மை நெறியாளரும் ‘தமிழக குரல்’ நாளிதழின் இணை ஆசிரியருமான கமால் கேவிஎல், டேஸ்ட்டி பிரியாணி நிறுவனர் ஹனிபா, ஆர்ஜே செந்தில், கிரீன் ஹவுஸ் கண்ணன், பெருமாள் பூக்கடை பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அஸ்லம் தாதா பாசப்பறவைகள் நிர்வாகிகள் ஹபீப்காசிம், ஹாசிம், அன்வர் தீன், சண்முகம், ஹைதர், நந்து, சையது ஷாபி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
காலை 9.00 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சியில், பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து நடன நிகழ்ச்சிகள், கண்களை கட்டிக்கொண்டு உரி உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் டேஸ்ட்டி பிரியாணி உணவகம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. வருகை தந்த அனைவருக்கும் அஸ்லம் தாதா பாசப்பறவைகள் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)
No comments:
Post a Comment