கத்தார், பிப். 06:
கத்தார் நாட்டில் வாழும் தமிழர்களின் ஒற்றுமை, பண்பாடு மற்றும் சமூக சேவைகளை வெளிப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை அமைப்பின் 7ஆம் ஆண்டு துவக்க விழா மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.
இந்த விழா, ஒருங்கிணைந்த தமிழர் பேரவை தலைவர் வலியுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் ஈஸ் சிங்ஹால் (Labour & Community Welfare, Visa and OCI) கலந்து கொண்டு, கத்தாரில் வாழும் தமிழர்களின் சமூக பங்களிப்பையும் பேரவையின் தொடர்ச்சியான சேவைகளையும் மனமார பாராட்டினார்.
மேலும், Non Resident Tamils Welfare Board கமிஷனர் டாக்டர் எம். வள்ளலார், ஐ.ஏ.எஸ்., விழாவில் கலந்து கொண்டு, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். இதனைத் தொடர்ந்து, NRT Welfare Board உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான புகழ் காந்தி, கடந்த ஏழு ஆண்டுகளாக ஒருங்கிணைந்த தமிழர் பேரவை சமூக நலன், மொழி வளர்ச்சி மற்றும் கலாச்சார பாதுகாப்பு துறைகளில் செய்துவரும் சேவைகளை நினைவுகூர்ந்து வாழ்த்துரை வழங்கினார்.
தமிழ் இலக்கியத்தின் பெருமையை உலக அரங்கில் எடுத்துச் செல்லும் வகையில், திருக்குறளை தமிழிலிருந்து அரபிக்கு நேரடியாக மொழிபெயர்த்த முதல் அறிஞரான பேராசிரியர் டாக்டர் ஜாஹிர் ஹுசைன், தமிழின் உலகளாவிய தன்மையும் அதன் தத்துவ ஆழமும் குறித்து சிறப்புரை ஆற்றினார். விழாவில் பிரபல மாயாஜாலக் கலைஞர் விக்கி க்ரிஷ் வழங்கிய கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இதனுடன் பல்வேறு சமூக தலைவர்கள், முக்கிய விருந்தினர்கள் மற்றும் தமிழ்சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவின் நிறைவில், ஒருங்கிணைந்த தமிழர் பேரவை கடந்த ஏழு ஆண்டுகளாக கத்தாரில் ஆற்றி வரும் சமூக சேவைகள், தமிழர் நலப் பணிகள் மற்றும் கலாச்சார முயற்சிகள் நினைவுகூரப்பட்டு, எதிர்கால பணிகளுக்கு அனைவரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்த 7ஆம் ஆண்டு விழா, கத்தார் தமிழர்களின் ஒற்றுமை, உறுதி மற்றும் சமூக பொறுப்புணர்வை எடுத்துக்காட்டும் நினைவுகூரத்தக்க நிகழ்வாக அமைந்தது.
மேலும், விழாவிற்காக பரிமாறப்பட்ட The Cakery21 இன்ஸ்டா பிரபல ஹோம் மேட் கேக், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரின் பெரும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
— தமிழக குரல் | துணை ஆசிரியர் (வளைகுடா நாடுகள்) : கமல் கே.வி.எல்.

.jpg)
No comments:
Post a Comment