துபாயில் பிரமாண்டமாக நடைபெற்ற “முதல்வர் சி. ஜோசப் விஜய் எனும் நான்...” தவெக வெற்றி விழா. - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 21 May 2026

துபாயில் பிரமாண்டமாக நடைபெற்ற “முதல்வர் சி. ஜோசப் விஜய் எனும் நான்...” தவெக வெற்றி விழா.


துபாய், மே.21:
 


ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் “முதல்வர் சி. ஜோசப் விஜய் எனும் நான்...” என்ற தலைப்பில் தவெக கட்சியின் வெற்றி விழா பிரமாண்டமாக நடைபெற்றது. அல் புஸ்தான் பிசினஸ் சென்டர் உள்ளரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இவ்விழாவை மக்கள் ஆர்ஜே சாரா தொகுத்து வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் சகோதரி பல்லவி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். மேலும் தோழமை கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் மற்றும் இந்தியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் அமீரக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இவ்விழாவை தமிழக வெற்றிக்கழகத்தின் அமீரக துணை செயலாளர் பூர்ணிமா மற்றும் நிர்வாகிகள் அனிஷா, அமீர்கான், ராயல்ட், பிரகதீஸ், ரெயித், கோபு உள்ளிட்ட குழுவினர் ஒருங்கிணைத்தனர்.


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். தொடர்ந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து விழா நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad