துபாயில் “மொழி நம் வழி” நிகழ்ச்சி மூலம் பேச்சாற்றல் மற்றும் வாசிப்பு திறன் வளர்க்கும் சிறப்பு முயற்சி. - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 11 May 2026

துபாயில் “மொழி நம் வழி” நிகழ்ச்சி மூலம் பேச்சாற்றல் மற்றும் வாசிப்பு திறன் வளர்க்கும் சிறப்பு முயற்சி.


துபாய், மே.12:


துபாயில் பல்வேறு சமூக மேம்பாட்டு பணிகளை துபாய் அரசின் சமூக மேம்பாட்டுத்துறையின் ஆதரவுடன் செய்து வரும் கிரீன் குளோப் அமைப்பின் சார்பில், “மொழி நம் வழி” என்ற தலைப்பில் பேச்சாற்றல், கதைகூறல் மற்றும் புத்தக வாசிப்பு திறன்களை வளர்க்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. துபாய் ஹோர் அல் அன்ஜ் பகுதியில் உள்ள பொது நூலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் அபுபக்கர் தலைமை வகித்தார்.


சிறப்பு விருந்தினராக சங்கீதா உணவகத்தின் பங்குதாரர் கீழக்கரை ஏ. முஹம்மது மஹ்ரூப் கலந்து கொண்டார். மேலும், மூத்த ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத்துல்லாஹ், ஜாகுவர் பிரிண்டிங் பிரஸ் ஷா, எழுத்தாளர் பஜீலா நிஜாமுதீன், புத்தக ஆர்வலர் மன்னர் மன்னன், பீஸ் அன்ட் கேர் அமைப்பின் ரபீக், இந்திய நலவாழ்வு பேரவையின் அமீரக தலைவர் அப்துல் ஹாதி, சிஜோ பால், Inspiration One Studio நிறுவனர் பிரவீன் ஜெயக்குமார், வளைகுடா முதன்மை நெறியாளர் கமல் கே.வி.என்., பச்சை மண் பாசறை அப்துல் நாசர், உசைன், ராப் சிங்கர் ஷேக், பிளசண்ட் டூரிசம் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மாஜிதா பேகம், காரைக்கால் வானொலியின் முன்னாள் நிகழ்ச்சி தயாரிப்பாளரும் பட்டிமன்ற பேச்சாளருமான நூர் பாத்திமா, ஆசிரியர் பீமா, கஸ்தூரி முனவர்ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் முதல் முறையாக தங்களது பேச்சாற்றல் மற்றும் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றனர். நிகழ்ச்சி அனைவரின் வாழ்க்கையிலும் நினைவுகூரத்தக்க அனுபவமாக அமைந்ததாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கிரீன் குளோப் அமைப்பின் உறுப்பினர்கள் ரசூல், தாஹிர், பீர் முஹம்மது, சாபீர் மற்றும் தன்னார்வலர்கள் சிறப்பாக மேற்கொண்டனர்.


நிகழ்ச்சியின் இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad