துபாய், மே. 07:
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் முதல் தமிழ் இசைக்குழுவாக செயல்பட்டு வரும் “மெட்ராஸ் பீட்ஸ்” இசைக்குழுவின் சார்பில் “Soulful Tamil” என்ற இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நிறுவனர்கள் சேதுராமன் சந்திரசேகரன் மற்றும் ரம்யா சேதுராமன் தலைமையில் நடத்தினர்.
தமிழ் இசை ரசிகர்களை கவர்ந்த இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் பர்ஹான் உள்ளிட்ட பாடகர்கள் கலந்து கொண்டு இசை விருந்தை வழங்கினர். நிகழ்ச்சியில் இசைக்கலைஞர்களின் நேரடி இசை வாசிப்பும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக TEPA டாக்டர் பால் பிரபாகர், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், தொழிலதிபர் ஷா, ஹோப் சமூக அமைப்பு நிறுவனர் கௌசர் பேய்க், முதன்மை நெறியாளர் Kamel KVL, தினகுரல் தமிழ் தேசிய நாளிதழின் முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, ருக்குன் தொழிலதிபர் ராபீன்சன், பொன்மலை பொழுது கணேசன், சைபான் குரூப் சிஇஓ சந்திரசேகரன், வரதராஜன், அல்தானா தமிழ் சங்கம் காமராஜ், குறிஞ்சி குரூப் நிறுவனர் ரமேஷ், குறும்பட தயாரிப்பாளர் ரமா மலர் மற்றும் சமூக சேவகி ஜெயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சிறப்பாக பாடிய கலைஞர்களுக்கு மெட்ராஸ் பீட்ஸ் இசைக்குழுவின் நிறுவனர்கள் சேதுராமன் மற்றும் ரம்யா சேதுராமன் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். தமிழ் இசை மற்றும் கலைக்கான ஆதரவை வெளிப்படுத்திய இந்த நிகழ்ச்சி, துபாயில் உள்ள தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

.jpg)
No comments:
Post a Comment