ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் உள்ள சபாரி மாலில் அமைந்த கலையரங்கில், அமீரக தமிழ் சங்கம் சார்பில் Autism Awareness Day, தமிழ் புத்தாண்டு மற்றும் மகளீர் தினத்தை முன்னிட்டு முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சங்கத் தலைவர் டாக்டர் ஷீலா தலைமையில் நடைபெற்றது. விழாவில் அமீரகம் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் தனித்திறன் நிகழ்ச்சிகளை வழங்கினர்.
மேலும் “கடவுளின் குழந்தைகள்” என அழைக்கப்படும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக, அவர்களுக்கு நினைவுப் பரிசுகள் (Momento), சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு கௌரவ விருந்தினர்களாக அமீரகத்தை சேர்ந்த நடிகர் அப்துல்லா அல் ஜாபாலி, நப்தல்லா எமராட் இயக்குநர் மஹமூது மூஸா, யோகா சாதனையாளர் டாக்டர் அம்ருதா ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், தொழிலதிபர் ஷா, மஞ்சுளா ராமகிருஷ்ணன், முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், TEPA டாக்டர் பால் பிரபாகர், GP ப்ரொடக்ஷன் பிரசாத், ஸ்பிரெட் ஸ்மைல்ஸ் நிறுவனர் ஆர்ஜே சாரா, தினகுரல் நிருபர் நஜீம் மரிக்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை ஆர்ஜே மாயா மற்றும் சமீர் தொகுத்து வழங்கினர். நிறைவாக சங்கத் தலைவர் டாக்டர் ஷீலா நன்றியுரை வழங்கி நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)
No comments:
Post a Comment