துபாய் – ஏப்ரல் 14:
துபாயில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பான Green Globe சார்பில் இரத்த தட்டணு (Platelet) தான முகாம் கடந்த 12ஆம் தேதி ஷார்ஜா முவைலா பகுதியில் நடைபெற்றது. இந்த முகாம், Emirates Health Services (EHS) இரத்த தான வங்கியில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதில் பல தன்னார்வ கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்த தட்டணு தானம் செய்து மனிதநேய சேவையில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு கிரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் ரசூல், தாஹிர், பீர் முஹம்மது அப்துல் ரஹ்மான், சாபீர் உள்ளிட்டோர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்தனர். மேலும், Peace and Care நிறுவனர் முஹம்மது ரபீக், வளைகுடா முதன்மை நெறியாளர் கமல் KVL, குரல் நஜீம், கேசிசி முஹம்மது ராசிக், நஜீர் ஜாபர், தேஷ் குமார், மன்னை சுரேஷ், ஆரா அகாடமி ஐஸ்வர்யா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் கிரீன் குளோப் சார்பில் உணவு, பழங்கள் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது. இந்த முகாம் மூலம் இரத்த தட்டணு தானத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், சமூக நல சேவையில் பொதுமக்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும் என்ற செய்தியும் வலியுறுத்தப்பட்டது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)
No comments:
Post a Comment