துபாய், ஏப்ரல். 01:
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், ட்ரிப்பிள் எம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவான ‘Mute Love’ குறும்படம் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது. இந்த குறும்படத்தை நிறுவனர் பாபு ராமகிருஷ்ணன் மற்றும் மஞ்சுளா ராமகிருஷ்ணன் தயாரித்துள்ளனர். கதை மற்றும் இயக்கத்தை இம்ரான் பாஷா மேற்கொண்டுள்ளார். இசையை விஜய் வீரபாண்டியன் வழங்கியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த உமர் ஷெரீப், பூஜா பாலகிருஷ்ணன், இஜாஸ் அஹ்மத், கதிர் பாஷா, ரேகா, ஹேமநாதன், லோகேஷ் சின்டலா, சூரிய உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நவீன காலத்தில் கைபேசி பயன்பாட்டின் தாக்கத்தால் மனிதர்களின் உறவுகள் எப்படி மாறுகின்றன என்பதையும், அதனால் உருவாகும் மௌனமான காதல் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட நேர மொபைல் பயன்பாட்டின் விளைவுகள் குறித்த விழிப்புணர்வும் இதில் எடுத்துரைக்கப்படுகிறது.
மேலும், வெளிநாட்டில் வேலை செய்து கொண்டே சினிமா கனவுகளுடன் இருக்கும் தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில், தொழிலதிபர் பாபு ராமகிருஷ்ணன் ‘Triple M Production’ நிறுவனத்தை தொடங்கி, இக்குறும்படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘Mute Love’ குறும்படம் வெளியான பின்னர், பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

.jpg)
No comments:
Post a Comment