துபாயில் கிரீன் குளோப் அமைப்பின் இஃப்தார் விழா: தன்னார்வலர்கள் கெளரவிப்பு. - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 19 March 2026

துபாயில் கிரீன் குளோப் அமைப்பின் இஃப்தார் விழா: தன்னார்வலர்கள் கெளரவிப்பு.


துபாய் – மார்ச். 19:


துபாயில் இயங்கி வரும் கிரீன் குளோப் சமூக நல அமைப்பின் சார்பில், ரமலான் மாதத்தின் 27வது நோன்பை முன்னிட்டு இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களை கெளரவிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சிங்கப்பூர் ஹவுஸ் நிறுவன உரிமையாளரும், அமீரக காங்கிரஸ் தலைவருமான டாக்டர் அப்துல் மாலிக், ஜாகுவார் பிரின்டிங் நிறுவன உரிமையாளர் ஷா, அன்வர் குரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவன உரிமையாளர் அன்வர்தீன், வளைகுடா முதன்மை நெறியாளர் கமல் KVL, பின் ஸைபான் நிறுவன CEO சந்திரசேகர், மெரிடியன் மேக் நிறுவன CEO சுரேஷ் ரோவே, தொழிலதிபர் முர்தூஜா, AWR நிறுவன நிறுவனர் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மேலும், ஊடக நிபுணர் இதயத்துல்லாஹ், தினேஷ் மற்றும் குடும்பத்தினர், துபாய் காவல்துறையில் பணியாற்றும் ஆயங்குடி ஜமாத் தலைவர் முகமத் ஆரிஃப், பீஸ் அண்ட் கேர் நிறுவனர் ரபீக் மற்றும் குழுவினர், நஜீர் ஜாபர், முத்தமிழ் சங்கம் ஷாஹுல் ஹமீது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியின் தொடக்கத்தில், கிரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் வரவேற்புரை நிகழ்த்தி, அமைப்பின் சமூக சேவைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியை உறுப்பினர் தாஹிர் தொகுத்து வழங்கினார்.


நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டது. மேலும், அமைப்பின் உறுப்பினர்களான ரசூல், தாஹிர், அப்துல் ரஹ்மான், பீர் முஹம்மது, சபீர் உள்ளிட்டோர் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.


நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இஃப்தார் உணவு தொகுப்புகள் வழங்கப்பட்டன. இறுதியாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மற்றும் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

No comments:

Post a Comment

Post Top Ad