துபாய், மே.21:
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், ட்ரிப்பிள் எம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்ட “Mute Love” குறும்படம் பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி முன்னிலையில் சிறப்பாக திரையிடப்பட்டது. ட்ரிப்பிள் எம் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் பாபு ராமகிருஷ்ணன் மற்றும் மஞ்சுளா ராமகிருஷ்ணன் தயாரிப்பில், ஜெகன் சுப்பிரமணியம் கிரியேட்டிவ் தயாரிப்பாகவும், இம்ரான் பாஷா கதை மற்றும் இயக்கத்திலும், விஜய் வீரபாண்டியன் இசையிலும் இந்த குறும்படம் உருவாகியுள்ளது.
தயாரிப்பு நிர்வாகிகளாக கோமதி சிவலிங்கம், ரெக்ஸ்மி மற்றும் சந்தோஷ் பணியாற்றியுள்ளனர். அமீரகத்தில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த உமர் ஷெரீப், பூஜா பாலகிருஷ்ணன், இஜாஸ் அஹ்மத், கதிர் பாஷா, ரேகா, ஹேமநாதன், லோகேஷ் சின்டலா மற்றும் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். துபாயில் உள்ள ஹாயத் ரெசிடன்ஸி திரையரங்கில் நடைபெற்ற இந்த திரையிடலில் ஏராளமானோர் கலந்து கொண்டு படத்தை பார்வையிட்டனர். இன்றைய நவீன காலத்தில் கைபேசி பயன்பாட்டால் உருவாகும் மௌனமான காதல், மனித உறவுகள் மற்றும் நீண்ட நேர மொபைல் பயன்பாட்டின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், அமீரகத்தில் பணிபுரிந்துகொண்டே சினிமா கனவுகளோடு இருக்கும் தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு உருவாக்கும் நோக்கில் “மூவி மேக்கர்ஸ் கிளப்” என்ற அமைப்பை தொழிலதிபர் பாபு ராமகிருஷ்ணன் தொடங்கி, அதன் மூலம் இந்த குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திரையிடலுக்கு பிறகு “Mute Love” குறும்படம் பார்வையாளர்களிடையே நேர்மறையான கருத்துக்களையும் பாராட்டுகளையும் பெற்று வரவேற்பை பெற்றுள்ளது.


No comments:
Post a Comment