துபாயில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாள் விழா கோலாகலம். - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 24 June 2026

துபாயில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாள் விழா கோலாகலம்.


துபாய், ஜூன் 25:


ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், அமீரக தமிழ் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாள் விழா கடந்த 22ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. அமீரக தமிழ் சங்க தலைவி டாக்டர் ஷீலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை லாவண்யா மற்றும் அமல்ராஜ் தொகுத்து வழங்கினர்.


விழாவில் பிரம்மாண்டமான பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன், தனித்திறனாளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள், தமிழ் வழிக் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கும், சிறந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு மற்றும் கௌரவிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் கலாச்சார நடனங்கள், கலைநிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தமிழக முதல்வரின் ஓவியம் வரையும் நிகழ்வும் இடம்பெற்றது.


அமீரகத்தில் வசிக்கும் தனித்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், நினைவுப் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் மொமென்டோக்களை டாக்டர் ஷீலு வழங்கி கௌரவித்தார்.


இந்நிகழ்ச்சியில் சிறப்பு கௌரவ விருந்தினர்களாக அமீரக நடிகர் அப்துல்லா அல் ஜாபாலி, நப்தல் எமராட் இயக்குநர் மஹமூது மூஸா, சமூக வலைதள பிரபலம் சுரூர் சயீத், துபாய் காவல் அதிகாரி ஓமர், சோர்ஸ் கிளப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பு ஹம்சா, இலங்கைத் தமிழ் வானொலி தொகுப்பாளர் ஆர்ஜே கிருஷ்னி மணிப்பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், வளைகுடா முதன்மை நெறியாளர் கமல், தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, தொழிலதிபர்கள் மீனா, ஸ்ரீவித்யா சுகுமார், சல்வா குழும நிறுவனர் பகவதி ரவி, பச்சமண் பாசறை நாசர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு பூச்செண்டு மற்றும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டு, அமீரக தமிழ் சங்க தலைவி டாக்டர் ஷீலு நன்றியுரை வழங்கினார்.

மேலும், நித்யா என்ற கலைஞர் க்ளிட்டரிங் ஆர்ட் முறையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் உருவப்படத்தை உருவாக்கி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். 

No comments:

Post a Comment

Post Top Ad