அமீரக புஜைராவில் அமீரக தமிழ் சங்க தலைவி டாக்டர் ஷீலு இல்லத் திருமண விழா முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு – மணமக்கள் ஆண்ட்ரீவ் டேனியல், லயா ஜோசப்புக்கு வாழ்த்து. - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 31 August 2026

அமீரக புஜைராவில் அமீரக தமிழ் சங்க தலைவி டாக்டர் ஷீலு இல்லத் திருமண விழா முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு – மணமக்கள் ஆண்ட்ரீவ் டேனியல், லயா ஜோசப்புக்கு வாழ்த்து.


அமீரகம், ஆக.31:


ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்பட்டு வரும் அமீரக தமிழ் சங்கம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் அமைப்பின் தலைவி டாக்டர் ஷீலு அவர்களின் மகன் திருமண விழா, ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைராவில் உள்ள திருமண அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது.


இத்திருமண விழாவில் மணமகன் ஆண்ட்ரீவ் டேனியல், மணமகள் லயா ஜோசப் ஆகியோர் திருமண பந்தத்தில் இணைந்தனர். விழாவில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள் மற்றும் நண்பர்கள், மணமக்களை மனமார வாழ்த்தினர்.


நிகழ்ச்சியில் துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், வளைகுடா செய்தி தொடர்பாளர் கமல்கேவிஎல், ருக்குன் மேலாண்மை இயக்குநர் ராபின்ஷன், தநூப் குரூப் பொது மேலாளர் பிரசாத், தினகுரல் தேசிய நாளிதழ் வளைகுடா தலைமை செய்தியாளர் நஜீம் மரிக்கா, Dubai TamilBuzz இயக்குநர் சாகுல் ஹமீது, தமிழ் பின்னணி பாடகர் கோகுல் பிரசாத், சமூக ஆர்வலர் உஸ்மான், அமீரக நடிகர் அப்துல்லா ஜபலி, அஞ்சப்பர் செந்தில், பச்சை மண்ணு அமைப்பின் நாசர், ராஜன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


திருமண விழாவில் கலந்து கொண்ட அனைவரும் மணமக்கள் ஆண்ட்ரீவ் டேனியல் மற்றும் லயா ஜோசப் ஆகியோருக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்தனர். உறவினர்கள், நண்பர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாழ்த்துகளுடன் திருமண விழா சிறப்பாக நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad