துபாயில் Spread Smile's நிறுவனம் நடத்திய பெண்கள் தின கொண்டாட்டம்.. - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 28 May 2024

துபாயில் Spread Smile's நிறுவனம் நடத்திய பெண்கள் தின கொண்டாட்டம்..


ஐக்கிய அரபு அமீரக துபாயில் உள்ள   நட்சத்திர ஹோட்டலில்  Spread Smile's சார்பாக மகளிர் தினம் அதன் நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா தலைமையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


இந்த நிகழ்வில் அமீரகம் மற்றும் உலகளவில் பிரபலமான மற்றும் தனித்திறமை உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள்   வரவழைத்து  மேடையில் ஏற்றி அவர்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்தி அவர்கள் அனைவருக்கும்  நிறுவனர் மக்கள்  ஆர்ஜே  சாரா சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.


மேலும் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழ் லேடிஸ் அசோசியேசன் தலைவி சக்தி சோனா ராம், அமீரகத்தை சேர்ந்த ஊடக பிரபலம்  மோனா சுலைமான்,  தமிழக குரல் நாளிதழ் புதுகை ஸ்டார் தொலைக்காட்சி கேப்டன் தொலைக்காட்சி வளைகுடா முதலும் நெறியாளர் kamalkvl, அமீரக தமிழ் சங்க தலைவி ஷீலு, தொப்பி வாப்பா பிரியாணி இயக்குனர் குடு ஷரீப்  முக்தார், EDTech நிறுவனர் மற்றும் இன்ஸ்டா பிரபலம் ஆயிஷா ஷேக், தினகுரல் நாளிதழ் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழ்  வளைகுடா தலைமை நிருபர் நஜீம் மரிக்கா,தியா கோல்டு and டைமன்ட் நிறுவன இயக்குனர் ரீஷ்மா, தமிழ் ஹர்வேஸ்ட் நிறுவனர்  தமிழ் டோக்யோ தமிழ் சங்கம் ஹரி நாராயணன், தொழிலதிபர் டின்டோ விமல், எரோ லிங்க் நிறுவனர் மோஹனா, நஹ்லாரஷீம், ரெஸ்கேர் நிறுவனர் ரம்ஜத் ஷேக்,  உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.


நிகழ்ச்சியில் அமீரகம் மற்றும் உலகளவில் சோசியல், பொது மற்றும் ஊடகளவில் பிரபலமாக இருப்பவர்களுக்கும் குடும்ப பெண்களுக்கும் சிறந்த இன்ஸ்டா பிரபலம் விருதும், பெண்களுக்கான Spread Smiles's சிறந்த தாய் விருதும் கௌராவிக்கப்பட்டது.


மேலும் இந்நிகழ்வில் ஆசிய புக் சாதனைபாடகர் விக்னேஷ் பாடல் மற்றும்  பாடகி ஜனனி மற்றும் அவர் மகனோடு இணைந்து ஆடிய நடனம், சுகனியாவின் நடனம், நிஷா தீசாய் மற்றும் அவர் மகன் நடனம், மாணவி மஹீராவின் நடனம் ஆகியோர்களின் நிகழ்ச்சிகள் பலரின் வரவேற்பை பெற்றது.


நிகழ்ச்சியின்போது Spread Smile's நிறுவனர் மக்கள் ஆர் ஜே சாரா  தன்னம்பிக்கையோடு நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்தி நிறைவாக   அனைவருக்கும் இரவு விருந்துகொடுத்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், பார்வையாளர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும்  நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது..

No comments:

Post a Comment

Post Top Ad