துபாயில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் MPக்கு "தமிழ் போறம்" சார்பில் வரவேற்பு. - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 31 May 2024

துபாயில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் MPக்கு "தமிழ் போறம்" சார்பில் வரவேற்பு.


ஐக்கிய அரபு அமீரக துபாயில் காரமா பகுதியில் பராக் என்ற தனியார் உணவகத்தின் திறப்புவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்த  மாநிலங்களவை உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவனுக்கு "துபாய் தமிழ் போறம்"  சார்பில் துபாய்   தேய்ரா பகுதியில் யுனைடெட் ஹைப்பர் மார்க்கெட் அருகே  20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் உயர்தர சைவ உணவகமான அன்னபூர்ணா உணவகத்தில்  மாடியில் உள்ள நிகழ்ச்சி ஹாலில் அமைப்பின் தமிழ் போறம் அமைப்பின் தலைவர் பொன்ராஜ் டேனியல், பொதுச்செயலாளர் செந்தில்முருகன்  தலைமையில்   சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் மற்றும் வணக்கம் பாரதம் தமிழ் வார இதழ் தலைமை நிருபருமான முஹம்மது நஜீம் மரிக்கா, தமிழக குரல் முதன்மை நெறியாளர் Kamalkvl, அன்னபூர்ணா உணவாக மேலாளர் சங்கர் நாராயணன், விசிக அமீரக பிரிவு செயலாளர் அசோகன், அபுதாபி பரிமளம். ஷார்ஜா தமிழரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 


மேலும் இந்நிகழ்வில்  அமீரகத்தில் வசிக்கும் விசிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளோடு சுயவிவரங்களும்  கலந்துரையாடலும்  நடைபெற்றது  உரையாடலுக்குப்பிறகு தொண்டர்களும் நிர்வாகிகளும் விசிக தலைவர் தொல் திருமாவளவனுக்கு  பொன்னாடை மற்றும் பூங்கொத்து கொடுத்து கௌரவித்தனர். அதனைத்தொடர்ந்து  தமிழ் போறம் சார்பில் ஜூன் 2024 ல் நடக்க இருக்கும் Global  Business Excellence Award 2024 நிகழ்விற்காகன அழைப்பித்தாலும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.


இந்நிகழ்விற்கு வந்திருந்த அனைவருக்கும் அன்னபூர்ணா உணவகம் ஆதரவில்  இரவு உணவளித்து கெரவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad