ஷார்ஜாவில் புதுப்பொழிவுடன் திறக்கப்பட்ட சம்யுக்தாபவன் தமிழ் உணவகம் - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 22 May 2024

ஷார்ஜாவில் புதுப்பொழிவுடன் திறக்கப்பட்ட சம்யுக்தாபவன் தமிழ் உணவகம்


ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜா முசல்லா ஏரியா, ரோலா பகுதியில் matajer கேரிஃபோர் ஹைப்பர் மார்கட் அருகே  40 பேர்கள் இருந்து உணவருந்தக்கூடிய ஃபேமிலி ஹால்,  50க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொள்ளும் அளவிற்கு நிகழ்ச்சிகள் நடத்தி  தானாக உணவு எடுத்து உண்ணக்கூடிய நிகழ்ச்சி ஹால், மற்றும் 35 பேர் இருக்கை கொண்ட டைனிங் மற்றும் outside dining உள்ளிட்ட வசதிகளோடு மொத்தம் 125 இருக்கைகளுக்கு மேல்வசதி கொண்ட மிக பிரமாண்டமாக புத்தம் புதுப் பொழிவுடன் நிறுவனர் ராமமூர்த்தி மற்றும் அவரின் குடும்பத்தினர் முன்னிலையில் Loyal குரூப் GM திரு.velmurugan, விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் வெற்றியாளர் Krishaang, முத்தமிழ் சங்க தலைவர் ஷா ஆகியோரால்  திறக்கப்பட்ட தமிழ் உணவகம்.


இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக வேல்முருகன், துபாய் முத்தமிழ் சங்கம் சேர்மன் ராமசந்திரன், துணைசேர்மன் பிரசாத், மதுரை ஜாக்கரியா மற்றும் அதன் நிர்வாகிகள் ஷாஹுல் ஹமீது,, தங்கதுரை, பாளையங்கோட்டை ரமேஷ், சின்னா, சுரேஷ்குமார், யுக மூர்த்தி,மேலும் தமிழக குரல் தொலைக்காட்சி நாளிதழ் புதுகை தொலைக்காட்சி கேப்டன் தொலைக்காட்சி வளைகுடா முதன்மை நெறியாளர் kamal கேவிஎல், UTS ரமேஷ் விஸ்வநாதன், தேசிய தமிழ்  நாளிதழ் தினகுரல் வளைகுடா  தலைமை நிருபரும் வணக்கம் பாரதம் வார இதழ் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா, கிரீன் குளோப் நிறுவனர் சமூக சேவகி முனைவர் ஜாஸ்மின், துபாய் தர்பார் நிறுவனர் கபீர், அமீரக வலையொழி நிறுவனர் வரதராஜ் குமார், அமீரக தமிழ் பாடகி மிருதுளா ரமேஷ், பாடகர் கோகுல், உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள்  ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.


சம்யுக்தாபவன் நிறுவனர் ராமமூர்த்தி திறப்பு விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும் பூங்கொத்து மற்றும் பொன்னாடை அணிவித்து கௌரவித்து உணவு உபசரித்து நன்றி தெரிவித்தார். 


- தமிழக குரல் செய்திகளுக்காக துபாயில் இருந்து kamalkvl.

No comments:

Post a Comment

Post Top Ad