துபாயில் மெட்ராஸ் பீட்ஸ் இசைக்குழுவின் பிரமாண்ட ஓணம் இசை நிகழ்ச்சி! - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 23 September 2026

துபாயில் மெட்ராஸ் பீட்ஸ் இசைக்குழுவின் பிரமாண்ட ஓணம் இசை நிகழ்ச்சி!


துபாய் – செப்டம்பர் 22:
 


ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் முதல் தமிழ் இசைக்குழு என்ற பெருமையுடன் செயல்பட்டு வரும் மெட்ராஸ் பீட்ஸ் இசைக்குழு சார்பில் ஓணம் கொண்டாட்ட இசை நிகழ்ச்சி துபாய் கராமா பகுதியில் உள்ள விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.


மெட்ராஸ் பீட்ஸ் இசைக்குழுவின் நிறுவனர்களான சேதுராமன் சந்திரசேகரன் மற்றும் ரம்யா சேதுராமன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கோல்டன் ஸ்பெரோ நிறுவனத்தின் நிறுவனர் சதாம் ஹுசைன், KRS குரூப் இயக்குநர் ஸ்ரீகாந்த் கண்ணன், ரீகால் மீடியா இயக்குநர்கள் அப்துல் ஹமீது மற்றும் கபீர் முஹம்மது, ருகூன் குரூப் நிறுவனர் ராபின்ஷன் உள்ளிட்டோர் ஆதரவு வழங்கினர்.


சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பு

நிகழ்ச்சியில் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடகர் ரஞ்சித் உண்ணி, மலையாள கம்யூனிட்டியைச் சேர்ந்த அல் வபா குரூப் நிறுவனத்தின் நிறுவனர் முனீர் அல் வபா, வால்வொ பென்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஹமீது யாசின், வளைகுடா முதன்மை நெறியாளர் கமல் KVL, லூலூ KMCC பொதுமேலாளர் நிசாமுதீன், தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, பிளேசண்ட் டூரிசம் நிறுவனத்தைச் சேர்ந்த மஜிதா பேகம், எக்ஸ்பீரியன்ஸ் டூரிஸம் நிறுவனத்தின் நிறுவனர் தேஜஸ் சித்யாலா, சென்னை குல்பி நிறுவனர் சாதிக் பாட்சா, கூர வீடு நிர்வாகி ஆர்ஜே மாயா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களை மெட்ராஸ் பீட்ஸ் இசைக்குழுவின் நிறுவனர்களான சேதுராமன் மற்றும் ரம்யா சேதுராமன் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.


இசைக்கலைஞர்களின் கலை நிகழ்ச்சி

மெட்ராஸ் பீட்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த வைஷ்ணவி, காயத்ரி, விக்னேஷ், ஜோசப், மன்சூர், அருண், ஜோனி, ஹேமா, ஜோஷுவா, சுபைர், மெல்வின், நீரஜ், விவேக் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் தங்களது இசை மற்றும் பாடல் நிகழ்ச்சிகளை வழங்கினர்.


மேலும், JMFIVE – DJ இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இசைக்கலைஞர்களின் பாடல்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் பங்கேற்றவர்களை வெகுவாக கவர்ந்தன.


இதனைத் தொடர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து ஓணம் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக கலந்து கொண்ட அனைவருக்கும் ஓணம் சத்யா விருந்து வழங்கப்பட்டது.


இசை, கலை மற்றும் ஓணம் கொண்டாட்டத்தை ஒருங்கிணைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, துபாயில் வசிக்கும் தமிழ் மற்றும் மலையாள சமூகத்தினரிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad