ஐக்கிய அரபு அமீரக துபாய் தேரா பகுதியில் உள்ள அல்குரையர் மாலில் உள்ள ஸ்டார் சினிமா அரங்கில் தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் வெளியான (GOAT) கோட் திரைப்படம் அமீரகத்தில் வசிக்கும் அமீரக தளபதி ரசிகர் மன்ற தலைவர் ரகுவரன், செயலாளர் இஸ்மாயில், பொருளாளர் சதீஷ், ஒருங்கிணைப்பாளர் சுதாகர் மற்றும் மகளிர் அணி தலைவி ஆர்ஜே மாயா தலைமையில் அமீரகத்தில் வசிக்கும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் முன்னிலையில் கேக் வெட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியேந்தி ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு மிகச்சிறப்பாக திரையிடப்பட்டது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜயின் தாய்மாமா மகளுமான பாடகி பல்லவி வினோத்குமார், தினேஷ் கர்ணன் சிவகங்கை தெற்கு மாவட்ட ஒன்றியம், சீனிவாசன்,பிரபு, ABDUL HAMEED , சுரேஷ் , மூர்த்தி , தமிழக குரல் டிவியின் வளைகுடா முதன்மை நெறியாளர் Kamalkvl ,முத்தமிழ் சங்கம் தலைவர் ஷா மற்றும் சேர்மன் ராமசந்திரன்,விட் அமைப்பின் நிறுவனர் மெர்லின், KSR GLOBAL கோபி , ஜெகதீஷ் , பார்த்திபன் , பாலாஜி, Tamilachee Restaurant தமிழரசி அசோக் , பிரியா , துபாய் தர்பார் தலைவர் கபீர் , உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment