இவவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக KRG குரூப் நிறுவனத்தின் நிறுவனர் கண்ணன்ரவி, சன்டிவி முன்னாள் நெறியாளர் அபுல் ஃபைஸ், துபாய் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், WIT ஈவென்ட் நிறுவனத்தின் சேர்மன் மெர்லின், UTS ரமேஷ் விஸ்வநாதன், மனநல ஆலோசகர் டாக்டர் பஜிலா ஆசாத், தமிழகத்தின் தேசிய நாளிதழ் தினகுரல் மற்றும் வணக்கம் பாரதம் வளைகுடா முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா முத்தமிழ் சங்கம் ராமசந்திரன், ஷாஹுல் ஹமீது, தங்கதுரை, அதிமுக நிர்வாகி ரவிச்சந்திரன், அதிமுக அமீரக மகளீரணி தலைவி பானு, ரெஸ்கேர் ஹோம் ஹெர்த்கேர் நிறுவனர் ரம்ஜத் ஷேக், ஆடிட்டர் யுகமூர்த்தி, கடற்கரை பாண்டியன் ஈமான் நிர்வாகி பீர், மீடியா7 ஆஸ்கர், மதிமுக துபாய் நிர்வாகி துரை, துபாய் புல்லிங்கோ ஷாநவாஸ் மற்றும் அயாஸ், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இவவிழாவில் கலந்துகொண்ட KRG குரூப் நிறுவனத்தின் நிறுவனர் கண்ணன்ரவி கூறும்போது கேப்டன் விஜயகாந்த் அரசியலையும்தாண்டி அனைவருக்கும் பிடித்த நல்ல மனிதர் ஏழை எளியோர்களுக்கு பல உதவிகளை செய்தவர் அவருடைய பிறந்த நாள் விழாவில் தான் கலந்துகொண்டது மிகவும் சந்தோசமாக நினைக்கிறேன் என்று கூறினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக அமீரக தேமுதிக செயலாளர், தமிழக குரல் தொலைக்காட்சி நாளிதழ் வளைகுடா முதன்மை நெறியாளர் Kamalkvl நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment