இந்த நிகழ்ச்சி ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் தலைமையில் ஈமான் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நஜீம் மரிக்கா இறை வசனம் ஓத விழா குழு செயலாளர் ஹாஜா அலாவுதீன் வரவேற்புரையுடன் செயலாளர்கள் அஸ்கர் மற்றும் சமீர் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சன் டிவியின் முன்னாள் செய்தி வாசிப்பாளரும் புதுக்கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளரும் மற்றும் AF School of News Readers உரிமையாளர் N. அபுல் ஃபைஸ் தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்புகள் குறித்த சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக குரல் டிவி வளைகுடா முதன்மை நெறியாளருமான கமால் KVL, அமீரக தமிழ் சங்க தலைவி ஷீலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அமைப்பின் உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஊடக செயலாளர் அஸ்கர் நன்றியுரையுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவுடன் நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment