தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் கேப்டன் இந்திய அரசால் சிறந்த குடிமகன் என்று பெயர் பெற்றவர் பத்மபூஷன் விருது பெற்ற மாண்புமிகு விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை அக்கட்சியின் தொண்டர்கள் “வறுமை ஒழிப்பு தினமாக” உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
இன்று வளைகுடா நாடான குவைத்தில் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாளை குவைத் சிட்டியில் மிகப் பிரமாண்டமான முறையில் விஜயகாந்த் அவர்கள் மக்களுக்கு செய்த தொண்டுகளையும் தமிழக மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மகா பெரும் தலைவர் அவருடைய நினைவை போற்றியும் தேமுதிக குவைத் பிரிவு நிர்வாகிகள் அனைவரும் இணைந்து அதன் பொருளாளர் A.T.முருகன், தலைமையில், செயலாளர் மாலிக் அன்சாரி, துணைசெயலாளர் ரபீக்ராஜா முன்னிலையில், வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதில் அக்கட்சியின் துணைசெயலாளர் S.S.செந்தில், கேப்டன் மன்ற செயலாளர் A.பழனி, மற்றும் S.அன்புராஜா, M.பெரியார், M.யூசுப், R.பிரபாகரன், P.ஆறுமுகம், T.சிக்கந்தர் மற்றும் மற்றும் வளைகுடா நாளான குவைத்தைச் சார்ந்த ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டு மக்களுக்காக வாழ்ந்து மடிந்த மக்கள் தலைவருடைய பிறந்த நாளை நினைவு நாளாக கொண்டாடினர் அனைவருக்கும் கேக் இனிப்பு வகை பலகாரங்கள் அனைத்தையும் வழங்கி மிகச் சிறப்பான முறையில் கேப்டன் உடைய பிறந்த நாளையும் நினைவு நாளையும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment