துபாயில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 6வது நினைவேந்தல் மற்றும் நூற்றாண்டு நிறைவு விழா. - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 23 August 2024

துபாயில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 6வது நினைவேந்தல் மற்றும் நூற்றாண்டு நிறைவு விழா.


ஐக்கிய அரபு அமீரக துபாய் தேரா பணியாஸ்  பகுதியில் அமைந்துள்ள லேண்ட்மார்க்  ஹோட்டலில்  திமுக சார்பில் அமீரக திமுக அமைப்பாளரும், புலம்பெயர் தமிழர் நலவாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரான் ஏற்பாடு மற்றும் தலைமையில் எழுத்தாளர் ஆசிப் மீரான் தொகுத்து வழங்க   நடைப்பெற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 6வது நினைவேந்தல் மற்றும்   நூற்றாண்டு நிறைவு விழா. 

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து  திமுக மாணவரணி தலைவர் இரா. ரஜீவகாந்தி, சிங்கப்பூர் தொழிலதிபர் ராம் வெங்கட் ரமணன், திமுக மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா தமிழ் மாறன் ஆகியோர்  சிறப்பு விருந்தினர்களாக  கலந்துகொண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து நிகழ்ச்சியில்    உரையாற்றினார்கள்.


திமுக மாணவரணி தலைவர் இரா. ரஜீவகாந்தி பேசும்போது கருணாநிதியின் சாதனைகளையும், அவரது இலக்கிய படைப்புகள் குறித்தும், கலைஞரின்  ஜனநாயக அணுகுமுறைகள் குறித்தும் அதற்கான உதாரணங்களையும் கூறினார். மேலும் கலைஞரின் பிறமொழி நேசமும் தமிழ்மொழியின்மேல் வைத்திருக்கும் பாசத்தைப்பற்றியும், கலைஞர் மக்களுக்காக அயராது உழைத்து பற்றியும் அவர்வழியில் முதலவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகின்ற சிறப்பான ஆட்சிபற்றியும்    எடுத்துரைத்தார். 


மேலும்  துபாயில் கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து  வந்திருந்த முக்கியபிரமுகர்கள் நிர்வாகிகளுக்கும் பேசவாய்ப்பளித்து அனைவரையும் ஒருங்கிணைத்த  அமீரக திமுக பொறுப்பாளரும், வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய குழு உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரானை வாழ்த்துக்கள் கூறி பாராட்டினார்.


மேலும் நிகழ்ச்சியில் ஊடகவியளர் முதுவை ஹிதயாத்துல்லா, எழுத்தாளர் ஜெஸிலா பானு,  கவிஞர் சசிகுமார், தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் மற்றும் சதன் மெயில் ஆங்கில தேசிய நாளிதழ் வளைகுடா முதன்மை நிருபரும் வணக்கம் பாரதம் வார இதழ் இணை ஆசிரியருமான முஹம்மது நஜீம் மரிக்கா, முத்தமிழ் சங்கம்  ஷா, டயானா,  கவிஞர் மரியம் கபீர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் மேலும் விருந்தினர்களாக, ஆடிட்டர் யுகமூர்த்தி,   காயிதே மில்லத் பேரவை ஹமீத் ரஹ்மான், பிரசன்னா , முஸ்லிம் லீக் பரக்கத் அலி , காமில், முத்தமிழ் சங்கம் சின்னா, ஷாஹுல் ஹமீத்,  தமிழ் செல்வன், சமூக சேவகர் ஶ்ரீலேகா, அப்துல்லா கனி, அயலக உறுப்பினர் ஹாமீத், உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும், திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழக குரல் நியூஸ் வளைகுடா தலைமை நெறியாளர் Kamalkvl தனது வாழ்த்துக்களையும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அயழக தமிழர் நலவாரிய உறுப்பினர் SS மீரானுக்கு நன்றியும் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட அனைவருக்கும்  அமீரக திமுக அமைப்பாளரும், புலம்பெயர் தமிழர் நலவாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரான் நன்றிகளை தெரிவித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad