துபாய் புர்ஜ் கலீபாவில் நடைபெற்ற தமிழ்நாடு எம்பிகளோடு சமூக மற்றும் ஊடவியலார்கள் சந்திப்பு - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 20 August 2024

துபாய் புர்ஜ் கலீபாவில் நடைபெற்ற தமிழ்நாடு எம்பிகளோடு சமூக மற்றும் ஊடவியலார்கள் சந்திப்பு


ஐக்கிய அரபு அமீரக துபாயில் ATRAM குழும நிறுவனங்களின் தலைவர் தினேஷ் குருசாமி ஆதரவில் WIT ஈவென்ட் நிறுவனத்தின் நிறுவனர் மெர்லின் ஏற்பாட்டில்  நடைபெற்ற இந்திய சுதந்திர தின கொண்டாட்ட விழா துபாய் ஊது மேத்தா பகுதியில் உள்ள ஷேக் ரஷீத் மன்றத்தில் மிக சிறப்பாக நடைபெற்ற விழாவிற்கு  தமிழ் நாட்டிலிருந்து  கோயம்புத்தூர் தொகுதி இந்திய பாராளுமன்ற உறுப்பினர் கணபதி P ராஜுக்குமார் மற்றும் நாமக்கல் தொகுதி இந்திய பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். 


இதன் தொடர்ச்சியாக உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீபா உள்ள அர்மானிய நட்சத்திர ஹோட்டலில் உள்ள மீட்டிங் ஹாலில் சமூக ஆர்வலர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் ஊடகவியளர்கள் கலந்துரையாடல் சந்திப்பு நிகழ்ச்சி ATRAM குழும நிறுவனங்களின் தலைவர் தினேஷ் குருசாமி தலைமையில் WIT ஈவென்ட் நிறுவனத்தின் நிறுவனர் மெர்லின் முன்னிலையில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் ஊடகவியளர்களாக  தமிழக குரல் நியூஸ் டிவி வளைகுடா முதன்மை நிருபர் kamalkvl, தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் மற்றும் சதன் மெயில் ஆங்கில தேசிய நாளிதழ் வளைகுடா முதன்மை நிருபரும் வணக்கம் பாரதம் வார இதழ் இணை ஆசிரியருமான முஹம்மது நஜீம் மரிக்கா, ரெஸ்ட் கேர் ஹோம் ஹெல்த் கேர் நிறுவனரும் ஊடகவியளருமான ரம்ஜத் ஷேக், ஊடகவியலாளர் கடல் குமார், ஆடிட்டர் யுகமூர்த்தி, தமிழ் தொழில்முனைவோர் அமைப்பான ரைஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு தொழில் மற்றும் தொழிலார்கள் சம்பந்தமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.


கலந்தாய்வின் தொடக்கமாக தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சியும் மற்றும் தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் வாரியம் அமைத்து தமிழர்கள் நலனில் கவனம் செலுத்தி ஆட்சி  செய்துவரும் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி கூறி தொடங்கப்பட்டது கூட்டத்தில் தினகுரல் நிருபரும் மற்றும் தமிழக குரல் நியூஸ் நிருபரும் கூறும்போது  அமீரகத்தில் தமிழ்நாடு அரசின் புலம்பெயர்  தமிழர்  நலவாரியம் குழுவின்  உறுப்பினரும், அமீரக திமுக பொறுப்பாளருமான எஸ்.எஸ்.மீரான் சிறப்பானமுறையில் செயல்படுத்தி வருவதாகவும் மேலும் புலம்பெயர்  தமிழர்  நலவாரியத்தின் அலுவலகங்கள் ஒவ்வொரு அமீரகத்தில் திறந்து அதற்கான அரசு மற்றும் அரசுசாரா நபர்களை அமர்த்தி வெளிநாடு தமிழர்கள் குறிப்பாக ப்ளூ காலர் என்று அழைக்கப்படும் தொழிலாளர்கள் நலன் காக்கவும் வசதியில்லாமல்  எதிர்பாராது விதமாக இறந்துபோவர்களின் உடல்களை ஊரில் உள்ள உரியவர்கள் இடத்தில் ஒப்படைக்க அமீரகத்தில் சகோதர கவுஸ் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக செய்யப்படுகிறது, இருந்த போதிலும் அதற்குரிய செலவுகள் செய்து  சேர்ப்பதற்கான   உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.


மேலும் தினகுரல்  நிருபர் நஜீம் கூறும் போது ப்ளூ காலர் என்று அழைக்கப்படும் தொழிலாளர்கள் இரண்டு வருடம் கழித்து சொந்த ஊர் செல்லும்போது அதற்குரிய விமான டிக்கட்டுகளில் தமிழ் நாடு அரசின் மூலம் ஒரு சிறிய சலுகை அளித்து குறைத்துக்கொடுத்தால் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதனை தமிழ் நாடு முதல்வர் பரிசீலிக்கவேண்டும் என்றும் கூறினார்.


எல்லா கருத்துக்கலையையும் கேட்டறிந்த இரு எம்பிக்களும் அனைவரின் கருத்துக்களும் முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கைள் மேற்கொள்ள பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.


நிறைவாக கலந்துரையாடல் ஏற்பாடு செய்த ATRAM குழும நிறுவனங்களின் தலைவர் தினேஷ் குருசாமி மற்றும்  WIT ஈவென்ட் நிறுவனத்தின் நிறுவனர் மெர்லின் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கும்  நன்றி தெரிவிக்கப்பட்டு கலந்துரையாடல் நிறைவுபெற்றது. 


- தமிழர் குரல் செய்திகளுக்காக கேமராமேன் செல்வம் அவர்களுடன் கமல் KVL.

No comments:

Post a Comment

Post Top Ad