நிகழ்ச்சியில் திரு. பிரின்ஸ் கௌரவ் கரன், இணைப்பாளர் (சமூக விவகாரங்கள்), மற்றும் திரு. அபராஜித் குமார் உதவிப் பிரிவு அதிகாரி (பாஸ்போர்ட்) உள்ளிட்ட தூதரக அதிகாரிகளுடன் உரையாடி அபுதாபில் வசிக்கக்கூடிய இந்திய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எடுத்துரைத்தார்கள்.
நிகழ்வின் போது, பாஸ்போர்ட் புதுப்பித்தலில் ஏற்பட்டுள்ள கணிசமான தாமதம் குறித்து அய்மான் சங்கத்தின் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. சமூகப் பணிகளுக்கான பொறுப்புகளை சமீபத்தில் ஏற்றுக்கொண்ட திரு.பிரின்ஸ் அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு, அய்மான் சங்கத்தின் சமூக செயல்பாடுகளை குறித்து கவனமாகக் கேட்டுக் கொண்டு, சாத்தியமான அனைத்து வழிகளிலும் அவர் ஆதரவளிப்பதாக உறுதியளித்தார் மற்றும் விரைவில் அய்மான் சங்கத்தின் நிர்வாக குழுவை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.
அய்மான் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு முழு ஆதரவு அளித்த தூதரக அதிகாரிகளுக்கு அய்மான் சங்கத்தின் சார்பில் .தமிழக குரல் நாளிதழ் தொலைக்காட்சி நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
No comments:
Post a Comment