துபாய் ரெட் கிரஸண்ட் சார்பில் சிறந்த சமூக சேவைக்கான விருதுபெற்ற தமிழகத்தை சேர்ந்த பெண்மணி ஜாஸ்மீன்! - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 28 July 2024

துபாய் ரெட் கிரஸண்ட் சார்பில் சிறந்த சமூக சேவைக்கான விருதுபெற்ற தமிழகத்தை சேர்ந்த பெண்மணி ஜாஸ்மீன்!


துபாயில்  தமிழகத்தின் மதுரையை  சேர்ந்த சமூகசேவகி ஜாஸ்மின் அபூபக்கர்  அமீரகத்தில் பல்வேறு சமூகசேவைகளை தொடர்ந்து இன்முகத்தோடு செய்து வந்தார் அதேபோல் சுற்றுசூழலில் அதிக ஆர்வம் கொண்டு தனது சமூக அமைப்பின் கீரீன்குளோப் சார்பில்  பள்ளி குழந்தைகளின் மூலமாக அமீரக சுகாதரதுறையோடு இனைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார் மேலும் அமீரகத்தில் உள்ள ரெட் கிரஸண்ட் சமூக அமைப்பில் தன்னார்வலராக சேர்ந்து பல்வேறு சமூக சேவைகளை செய்துவந்தார்.

மேலும் கொரோனா போன்ற   பேரீடர் காலத்தில் பல்வேறு சமூகசேவைகளை செய்தார்  அதன் அடிப்படையில் அமீரக ஷார்ஜா கலாச்சார மையத்தில் ரெட் கிரஸண்ட் சார்பில்  பல்வேறு சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது  அதன் அடிப்படையில் சமூக சேவைக்கான  சிறந்த விருதினை  தமிழ்நாடு  மதுரையைசேர்ந்த   ஜாஸ்மின் அபூபக்கருக்கு  ரெட் கிரஸண்ட் அமைப்பின் தலைவர்  வழங்கி கௌரவித்தார்.


கிரீன் குளோபல் சமூக சேவகி ஜாஸ்மின் அவர்களுக்கு தமிழக குரல் நாளிதழ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் இவர் சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad