அய்மான் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் கட்டணமில்லா மருத்துவ சலுகை அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 16 July 2024

அய்மான் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் கட்டணமில்லா மருத்துவ சலுகை அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


அய்மான் சங்கம் சார்பில் அபுதாபியில் வசிக்கக்கூடிய அனைத்து அய்மான் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு இலவச மருத்துவ முகாம் மற்றும் அல் அஹலியா கட்டணமில்லா மருத்துவ சலுகை அட்டை (Privilege Fast Service card) வழங்கும் நிகழ்ச்சி கடந்த 14/07/2024 ஞாயிற்றுக்கிழமை அன்று  மாலை 4:00 மணி முதல் 8:00 மணி வரை அபுதாபி ஹம்தன் ரோட்டில் அமைந்துள்ள அல் அஹலியா மருத்துவமனையில் மிக சிறப்பானமுறையில் நடைபெற்றது.


இன் நிகழ்ச்சியில் 2024-2025 வருடத்திற்கான சுமார் 1400 குடும்பங்களுக்கு  அல் அஹலியா மருத்துவமனை நிர்வாகம் சார்பில் முதல் கட்டமாக 200 நபர்களுக்கு நேரடியாக பிரிவில்லேஜ்  கார்டு வழங்கப்பட்டது. 


இந்த நிகழ்ச்சியில் அய்மான் தலைவர் கீழக்கரை ஹெச்.எம்.முஹம்மது ஜமாலுதீன் தலைமை வகித்தார்கள்  பைத்துல் மால் தலைவர் அதிரை எ.சாகுல் ஹமீது அவர்கள் அய்மான் முன்னுரை வழங்கினார்கள் ,சங்கத்தின் துணைத் தலைவர் காதர் மீரான் பைஜி, நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்கள்.


நிகழ்ச்சியில் இந்த வருடத்திற்கான முதல் பிரிவில்லேஜ் கார்டை அல் அஹலியா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் சங்கீதா சர்மா அவர்கள் வழங்க  அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை ஹெச். எம்.  முகம்மது ஜமாலுதீன்  அவர்கள் பெற்றுக் கொண்டார்கள் .


மேலும் தமிழகத்தில் மதுரையை சேர்ந்த  இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராம்பிரகாஷ்  அவர்கள் வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு தகவல்களை வழங்கினார்கள் மற்றும் ஹோமியோபதி மருத்துவர் நதியா,   பல் மருத்துவர் சஜினா, ஆயுர்வேத மருத்துவர்  ஆதார்ஷா அனைவரும் கலந்து கொண்டு  நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள், அதனைத் தொடர்ந்து  மருத்துவமனையின்  மக்கள் தொடர்பு அதிகாரி  பிலால் அப்துல் கரீம் , நிர்வாகி அஜில் பாலா, விற்பனை நிர்வாகி சிஜோ  ஜார்ஜ் அவர்களுக்கு அய்மான் சங்கத்தின் சார்பாக பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது 


மேலும் நிகழ்ச்சியில்  பொருளாளர் பசுபதி கோயில் சாதிக் பாஷா, செயற்குழு உறுப்பினர் கீழக்கரை சையது பாசில், ஊடகத் துறை செயலாளர்  தேவிப்பட்டிணம் ஹாஜா முபீனுத்தீன், நிர்வாக செயற்குழு உறுப்பினர் கீழக்கரை அஜ்மல் தாஹிர்,செயற்குழு உறுப்பினர் திருநெல்வேலி முகம்மது ஹுசைன், செயற்குழு உறுப்பினர் கட்டுமாவடி தஸ்தகீர் இப்ராகிம் அவர்களும், தமிழக குரல் செய்தி நிறுவனத்தின் வளைகுடா நெறியாளர் Kamalkvl வாழ்த்துக்கள் தெரிவித்தார்.


நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கு அய்மான் சங்கத்தின் சார்பாக அல் அஹலியா மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள். இதேபோன்று ஏற்கனவே அய்மான் சங்க உறுப்பினர்களுக்கு கடந்த ஜனவரி மாதம்  2024-2025 வருடம் 1050 குடும்பங்களுக்கு  LLH மருத்துவமனை நிர்வாகம் இலவச மருத்துவ முகாம் மற்றும் Privilege Fast Service card வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad