துபாய் மெரினா பகுதியில் உள்ள விருந்தினர் படகில் பிரம்மாண்டமான முத்தமிழ் சங்கத்தின் 34 ஆம் ஆண்டு வெற்றி கொண்டாட்டம். - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 13 May 2024

துபாய் மெரினா பகுதியில் உள்ள விருந்தினர் படகில் பிரம்மாண்டமான முத்தமிழ் சங்கத்தின் 34 ஆம் ஆண்டு வெற்றி கொண்டாட்டம்.


ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் செயல்பட்டுவரும் முத்தமிழ் சங்கத்தின் 34 ஆம் ஆண்டு வெற்றிவிழாவை முன்னிட்டும்  மே 5 தொழிலாளர் தினம்  அமீரகத்தில் பிரமாண்டாமாக கொண்டாடப் பட்டதற்காகவும்   முத்தமிழ் சங்கத்தின் சேர்மன் திரு ராமச்சந்திரன்  மற்றும் தலைவர் திரு ஷா அவர்களின் தலைமையில் பொதுச் செயலாளர் திரு சுரேஷ்குமார் அவர்கள் துணை பொது செயலாளர் சக்கரவர்த்தி அவர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மீடியா செயலாளர் கமல் kvl , சஷாஹுல் ஹமீது, ரமேஷ், ஆகியோர் இந்த வெற்றி கொண்டாட இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர் வந்திருந்த அனைவருக்கும் பிரியாணி விருந்தினை சம்யுக்தா பவன் உரிமையாளர் திரு ராமமூர்த்தி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள், மதுரை பிரியாணி மேலாளர் பாலா, முத்தமிழ் சங்கத்தின் புதிய உறுப்பினராக பொறுப்பேற்ற முனைவர் முஹம்மத் மைதீன், மதுரை காரல் மார்க்ஸ், மீடியா7 நியூஸ் அஸ்கர் அலி சின்னா, தங்கதுரை  ஆகியோர் முன்னிலையில் கேக்வெட்டி  சிறப்பாக  நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு சிறப்பு  விருந்தினர்களாக பெருமாள் பூக்கடை நிறுவனர்  மற்றும் டிக்டாக் பிரபலங்கள் உள்ளிட்டோர்  பலர்  குடும்பத்துடன் கலந்துகொண்டனர். இந்த வெற்றி கொண்டாட நிகழ்ச்சியில் முத்தமிழ் சங்கத்தின் சேர்மன் ராமச்சந்திரன் அவரது துணைவியார் மற்றும் முத்தமிழ் சங்கத்தின் PRO சாகுல் ஹமீத். தொழிலதிபர் யூசுப் அலி ஆகியோர் பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது.


மேலும் இந்த நிகழ்வு ஒரு மனநிறைவான  நிகழ்வாக இருந்ததில் பெருமிதம் கொள்கிறோம் என்று முத்தமிழ் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு சுரேஷ்குமார் அவர்கள் நன்றி கூறி விருந்து உபசரித்து  நிகச்சிக்கு வந்திருந்த ஆதரவாளர்கள் அனைவருக்கும்  பூமாலை போட்டு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுக்கொடுத்து கௌரவிக்கப்பட்டு   வந்திருந்த   அனைவருக்கும்  தனது வாழ்த்துக்களை  தெரிவித்து நிகழ்ச்சியினை நிறைவு செய்தார்கள்

No comments:

Post a Comment

Post Top Ad