துபாயில் துபாய் முத்தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

Post Top Ad

Monday, 8 April 2024

துபாயில் துபாய் முத்தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி

IMG-20240408-WA0037

ஐக்கிய அரபு அமீரக துபாயில்  செயல்பட்டு வரும் முத்தமிழ் சங்கம் ஈவென்ட்ஸ் நிறுவனம்  சார்பில் மத நல்லிணக்க  இஃப்த்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி துபாய்  ஊத் மேத்தா பகுதியில் உள்ள ஹோட்டலில்  நடைபெற்றது.

IMG-20240408-WA0036

இந்நிகழ்ச்சி முத்தமிழ் சங்கம் தலைவர் ஷா தலைமையில், சேர்மன் ராமசந்திரன், பொது செயலாளர் சுரேஷ் குமார், உதவி தலைவர் பிரசாத் ,கௌரவச் செயலாளர் மணியரசு மற்றும் நிர்வாகிகள் ஷாஹுல் ஹமீது,  கள்ளக்குறிச்சி சின்னா, பாளையங்கோட்டை ரமேஷ், தங்கதுரை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக, KRG குரூப் நிறுவனர் கண்ணன் ரவி, தமிழக குரல் மற்றும் கேப்டன் தொலைக்காட்சி வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், சல்வா குரூப் நிறுவனர் பகவதி ரவி, துபாய் ஈமான் அமைப்பு பொதுசெயலாளர் யாசீன் மற்றும் நிர்வாகிகள் ஜலால், ரியாஸ், சல்வா மியூசிக் குழுவினர்கள்,  தேசிய தமிழ்  நாளிதழ் தினகுரல் வளைகுடா  தலைமை நிருபர் மற்றும் வணக்கம் பாரதம் இணை ஆசிரியர்  நஜீம் மரிக்கா, கிரீன் குளோப் நிறுவனர் சமூக சேவகி முனைவர் ஜாஸ்மின், குறும்பட இயக்குனர் ஆண்ட்ரியா, டாக்டர் ஹுமைத் அபூபக்கர், குடவாசல் பஹாத், ஆசியா புக் சாதனை பாடகி மிருதுளா,  உள்ளிட்ட  ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். 


அத்துடன் புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்பு மற்றும் மே தின கொண்டாட்ட விழா அறிவிப்பும் சிறந்த முறையில் நடந்தேறியது.

No comments:

Post a Comment

Post Top Ad