அபுதாபியில் மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த வாலிபர்; தமிழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார். - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 4 April 2024

அபுதாபியில் மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த வாலிபர்; தமிழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.


அபுதாபியில் தமிழகத்தை சேர்ந்த வாலிபர் புதாபி அய்மான் சங்கத்தினர் முயற்சியில் மீட்கப்பட்டார், குறித்து அந்த சங்கத்தை சார்ந்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், கடந்த 19-03-2024  அன்று அபுதாபி முஸ்ஸபா பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உணவில்லாமல் தங்க இடமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார் அவரை தமிழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அமீரகத்தில் பல பகுதியில் இருந்தும் அபுதாபி அய்மான் சங்கத்தினருக்கு கோரிக்கைகள் வந்தது, அதன் அடிப்படையில் எங்கள் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H. M. முகம்மது ஜமாலுதீன் அய்மான் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி அந்த நபருக்கு உடனடியாக தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு கேட்டுக்  கொண்டார்கள் 


நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் MAK தலைமையில் நான்கு நாட்களாக அந்த நபரை தேடிய அய்மான் சங்கத்தின்  நிர்வாகிகளுக்கு நாள் 23-03-2025 அன்று காலை ஒரு தொலைபேசியின் மூலம் கடையநல்லூர் அருகே உள்ள சுரண்டை என்கின்ற ஊரைச் சேர்ந்த  சகோதரர் வின்சென்ட் அவர்கள் தொடர்பு கொண்டு நீங்கள் தேடிக் கொண்டிருக்க கூடிய நபர் இங்கு இருக்கிறார் என்று சொன்னதும் அவரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி விரைவில் இந்திய தூதரகத்தின் மூலமாக  தமிழகத்திற்கு அனுப்பி வைக்கின்றோம் என்று சொன்னோம்.


இரண்டு நாட்கள் தற்காலிகமாக ஷாபியாவில் சகோதரர் வின்சென்ட்,  ராஜேஷ் மற்றும் சுரேஷ்  அவர்களின்  பராமரிப்பில் அவரைத் தங்க வைக்கப்பட்டிருந்தோம். அவரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால்  உடனடியாக  அவர் பணியாற்றிய  நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நிறுவனத்தின் உதவியுடன் முசஃபா அல் அகலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் பணியாற்றிய நிறுவனத்தை தொடர்பு கொண்டோம் ஆனால் அவரை தங்க வைப்பதற்கு எந்த ஒரு ஏற்பாடுகளும் செய்து தரவில்லை.


உடனடியாக  இந்திய தூதரகத்தின் உதவியுடன் தமிழகம் திரும்ப எங்கள் அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள், இதற்கிடையில் மணிகண்டன் ஜெயராமன் அவர்களை தங்க வைப்பதற்கும், உணவு ஆகிய தேவையான உதவிகளை அய்மான் பைத்துல் மால் பொது செயலாளர்  பார்த்திபனூர் நிஜாம் மைதீன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.


அதனைத் தொடர்ந்து மணிகண்டன் சம்பந்தமாக அவர் பணிபுரிந்த  நிறுவனத்தில் பல பேச்சுவார்த்தை நடத்தி அதில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு இந்திய தூதரகத்தின் உதவியுடன்  கடந்த 02-04-2024 அன்று மணிகண்டன் ஜெயராமன் அவர்களுடைய பாஸ்போர்ட்  கிடைக்கப்பெற்று. எங்கள் பொது செயலாளர் லால்பேட்டை A.முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி அவர்களின் தலைமையில் மணிகண்டனை இன்று 04-04-2024 அதிகாலை அபுதாபி விமான நிலையத்திலிருந்து இண்டிகோ விமானத்தில் சென்னைக்கு இந்திய தூதரகத்தின் உதவியுடன் எங்கள் அய்மான் நிர்வாகிகள் அனுப்பி வைத்தார்கள்.


மணிகண்டன் ஜெயராமன் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்காக உதவிய MAK, அய்மான் செயற்குழு உறுப்பினர்கள் அம்பகரத்தூர் முஹம்மது கைசர், கட்டுமாவடி தஸ்தகீர் இப்ராஹிம்  மற்றும் சமூக சேவகர்கள் அனைவருக்கும் அய்மான் சங்கத்தின் சார்பாக நன்றிகளை  தெரிவித்துக் கொள்கின்றோம் மேலும் பெரிதும் உதவிய இந்திய தூதரகத்தின் அதிகாரிகளுக்கும், எங்களுக்கு உறுதுணையாக தமிழக குரல் வளைகுடா நெறியாளர் kamalkvl அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad