துபாய் CWM நிறுவன இயக்குனருக்கு "தமிழகத்தின் நம்பிக்கை நாயகி 2024" விருது வழங்கப்பட்டது. - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 28 March 2024

துபாய் CWM நிறுவன இயக்குனருக்கு "தமிழகத்தின் நம்பிக்கை நாயகி 2024" விருது வழங்கப்பட்டது.


ஐக்கிய அரபு அமீரக  துபாயில்  துபாய் அல் நஹ்தா  பகுதியில் உள்ள ஹோட்டலில் CWM நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜேஸ்வரி மதிவாணன் மற்றும் அவர் தாயார் தலைமையில் இப்தார் விருந்து நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழக குரல் இணையதளம், புதுவை ஸ்டார் தொலைக்காட்சி, கேப்டன் தொலைக்காட்சி முதன்மை நெறியாளர் kamalkvl, தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் முதன்மை நிருபர் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழ் இணை ஆசிரியர் நஜீம் மரிக்கா, TAM கன்சல்டன்சி நிறுவனத்தின் நிறுவனர் ஷாநவாஸ், நவரத்தினா ஜுவல்லரி நிர்வாகிகள் ஷமீம், பாரீஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள், மற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் சகபணியாளர்கள் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் தமிழ்குரல் செய்தி நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தின் நம்பிக்கை நாயகி 2024 விருது  எனும் துபாய் CWM நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திருமதி. இராஜேஸ்வரி மதிவாணன் அவர்களுக்கு தமிழககுரல் வளைகுடா முதன்மை நெறியாளரும் Kamalkvl, விருது சான்றிதழ் வழங்கி கெரவித்தார்.   இந்நிகழ்வு துபாய் அல் நஹ்தாவில்  நெஸ்டோ மாலில்  உள்ள நவரத்தினா ஜுவல்லரி மேலாண்மை இயக்குனர்  மற்றும் நிர்வாக இயக்குனர் முன்னிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் உணவு உபசறிக்கப்பட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் இராஜேஸ்வரி மதிவாணன் நன்றியுரையுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad